Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, February 26, 2012

கவிதை நூல்



எனது வாழ்வை நெறிப்படுத்திய சின்னச் சின்ன
விடயங்களைத் தொகுத்து மனமே விழித்திடு
என்னும் கவிதை நூலாக வெளியிட்டுள்ளேன்.
இந்த நூல் உங்கள் வாழ்வில் எங்கோ ஒரு சிறு
ஒளியை ஏற்படுத்தக்கூடும் என நம்புகிறேன்.



மனமே விழித்திடு என்னும் இக் கவிதை நூல்
கடந்த 17.02.2012 வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
திரு மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நூலை வெளியிட
சக்தி தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர்
திரு. என். உருத்திரேந்திரபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கள்ளிப்பட்டி தமிழியல் ஆய்வு அறக்கட்டளையின்
தலைவர் திரு.பூந்துறையன் அவர்களின் உறுதுணையுடன்
கோபி சிவமுருகன் அவர்களின் வடிவமைப்பில்
உருவான இந்நூல் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில்
விற்பனைக்குக் கிடைக்கும். விலை உரூ30.மட்டும்.

வாழ்க வளமுடன்.

.

Sunday, January 24, 2010

அந்த சில நிமிடத்தில்தான்



மின்சாரம் தடைபட்ட

அந்த சில நிமிடத்தில்தான்

அழகிய நிலா வானில்

அற்புதமாய் ஜொலிக்கக் கண்டேன்.

மண்வாசல் கட்டிலிலே

மல்லாந்து பார்த்திருந்த

சிறுவயது நட்சத்திரங்கள்

சிதறாமல் இருக்கக் கண்டேன்.

பாலகனாய் இருக்கக் கண்ட

பகட்டான மின்மினியின்

எத்தனாம் தலைமுறையோ

என் வீட்டு மரத்தில் இன்னும்...

சர்க்கரை பழத்தை திண்ண

சுற்றிவரும் வெளவாள் கூட்டம்

படபடத்துப் பறக்கும் பாங்கை

பார்த்து நான் வியந்தே நின்றேன்.

இயற்கையின் பாங்கை எல்லாம்

செயற்கைதான் மறைத்தனவோ !

வேசத்தை பூசும் மாந்தர்

நே(நெ)ச முகம் மறந்தே போனோம்.

Sunday, January 3, 2010

நல் மார்க்கமுள்ள திருநாடு


காந்தியும் வள்ளுவனும் கருணைமிகு புத்தனும்

வாடிய பயிர்கண்டு வாடிய வள்ளலாரும்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்ற

முறுக்குமீசை வீரன் முண்டாசு பாரதியும்



ஆறெல்லாம் கடல்நோக்கி மதமெல்லாம் இறைநோக்கி

எம்மதமும் தாழ்வில்லை எல்லாமே சமமென்ற

வீர முழக்கமிட்ட விவேகானந்தரெனும்

மகான் பிறந்த நல் மார்கமுள்ள திருநாடு



தவத்திலும் யோகத்திலும் தளர்விலா உயர்வோடு

குருகுல கல்வியிலே நிகரிலா உயர்வு கொண்டோம்

ஆங்கில கல்வி வந்தே அதிலே ஓர் தாழ்மைகொண்டோம்

எல்லாவில் துறை கண்டோம் வாழ்வியலை தொலைத்துவிட்டோம்



ஐம்பதாண்டு சுதந்திரத்தில் அயராது உழைத்தாலும்

வருமைஎனும் குறைதன்னை நிறையாக்க முடியவில்லை

வானம் பொய்த்திடுமோ வரும் பூச்சி கொன்றிடுமோ - என்று

அரை வயிறை நிரப்பிவிட்டு அதில் பாதி சேமித்தோம்



சேமிக்கும் பழக்கத்தால் பெரும்புயலில் தப்பித்தோம்

வளமிருந்தும் கடன் வாங்கும் பழக்கத்தால் மேற்கத்தார்

பெரும்புயலில் பொருளிழந்து பகட்டுடைந்து நிற்கின்றார்

தர்மம் தலையை கொஞ்சம் காக்கத்தான் செய்கிறது



ஓருலக கூட்டாட்சி சமைத்திடவே வேண்டுமென்று

இராணுவத்து வீண்செலவை சுபிச்சதிற்கு செலவிடவே

யோகம் தவத்தோடு நல்லெண்ண பழக்கங்களை

விதைக்கவந்த நல்லமகான் வேதாத்திரி வாழ்க வாழ்க.


நண்பர் குகன் அவர்களின் நகரத்னா பதிப்பகம்

வெளியிட்ட " காந்தி வாழ்ந்த தேசம் "
கவிதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற
எனது கவிதை.

Thursday, December 10, 2009

எங்கே சந்தோசம்

ஒரு இலக்கை வைத்துக்கொள்ளுங்கள், அந்த இலக்கை அடைந்தவுடன் இன்னொரு இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதுவே வழி. என்கிறது மேலை நாட்டு தத்துவம்.
கிடைத்ததைக் கொண்டு சந்தோசம் கொள்ளாமல் சந்தோசத்தை தள்ளிப்போடுங்கள் என்கிறது.

நமது நாட்டிலே முன்பெல்லாம் எண்ணெய் ஆட்ட செக்கு இழுக்க மாடுகளை பயன்படுத்துவார்கள். அப்போது மாட்டின் கழுத்தில் உள்ள நுகத்தடியில் ஒரு குச்சியை வைத்துக் கட்டி மாட்டிற்கு முன்னாள் ஒரு இரண்டடி தூரத்தில் ஒரு புல் கட்டை தொங்க விடுவார்கள். அந்த புல் கட்டை சாப்பிட நினைத்து மாடு நகரும் போது அந்த புல் கட்டும் நகரும். இவ்வாறானதே இந்த தத்துவம்.

சரி, நமது நட்டு சித்தாந்தம் சொல்வதென்ன : இருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் வாழுங்கள், மன நிறைவு பெறும்போது உங்கள் உள்ளமும் உயிரும் உன்னத ஆற்றல் பெறுகிறது. அப்பொழுது நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரு நிறைவுடனும், தெளிவுடனும், மனிதாபி மானம் நிறைந்ததாகவும் இருக்கும் என்கிறது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழச் சொல்கிறது. அதனால் பொருள் இருப்பு / இல்லை என்பதும் அதை தேடும் வேலையும் அதன் போக்கில் நடத்துவோம் . ஆனால் ஒவ்வொரு கணமுமே எது இருக்கிறதோ அதை மன நிறைவுடன் துய்ப்போம் என்கிறது.

இப்பொழுது தெரிகிறதா மேலை நாட்டில் பொருள் வளம் படைத்திருந்தும். மன வளத்திற்கு கீழை நாட்டின் சித்தாந்தத்தை தேடுவதன் ரகசியம்.

பதிவர்கள், வாசிப்பவர்கள் சந்திப்பு

Tuesday, December 8, 2009

பதிவர்கள் சந்திப்பு

பூஜிய பரப்பாக
பூமியை மாற்றிவிட்ட
வலைதளத்திலே திலைத்து
வண்ண கலை காட்டும்
நண்பர்கள் கூட்டமொன்று
நடக்கிறது ஈரோட்டில்
பகுத்தறிவு பெரியாரின்
பண்பான நகருக்கு
அன்புடன் அழைக்கின்றோம்.
அவசியம் வந்திடுவீர்.
உங்கள் வருகையை
உன்னதமாய் நினைக்கின்றோம் .
இன்னும் விபரத்திற்கு
ஈரோடு கதிர் பக்கம்,
சொடுக்கி பாருங்கள்
சுழற்றி பேசுங்கள்.
நன்றி நண்பர்களே
வாழ்க வளமுடனே .

20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3.30 மணிக்குத் துவங்கி மாலை 7 மணிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.சந்திப்பு நடைபெறும் இடம் :
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,ஈரோடு - 11


தயவுசெய்து பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் தங்கள் வருகையை முன் கூட்டியே இவர்களில் யாரிடமாவது உறுதி செய்துகொள்ளவும்.
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598

ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

Sunday, November 29, 2009

சுழற்சி



சுக்கிலமும் சுரோணிதமும் -ஒரு
புள்ளியில் தான் சந்தித்தன.
பிறக்கையிலே இரண்டுகிலோ
பின்னெப்படி பெரிதானோம்.

மண்ணிலே விளையாத
மற்றேதும் உண்டதில்லை
மண்ணீரும் காற்றுவெப்பம்
விண்சேர்ந்து உண்டான

பொருளேதான் நாமுண்டு
பெரிதாக வளர்ந்து நிற்போம்.
பஞ்சபூத மல்லாது
வேறொன்றும் நாமல்ல .

இரத்தமும் சதயாக்கி
கொழுப்பாக்கி எழும்பாக்கி
மச்சையாக்கி மூலயாக்கி
சுக்கிலமும் சுரோணிதமும்

மற்றுமொரு பிறப்பாக்கும்
வேலையை செய்வது யார்.
பேராற்றல் ஒன்றுண்டு - அது
எங்கும் நிறைந்துண்டு.

மனிதஉடல் மரித்தபின்னே
மறுபடியும் மண்ணாகும்.
சுழற்சிதான் எல்லாவும்
அணுமுதல் அண்டம்வரை.

Friday, November 20, 2009

தவம் என்றல் என்ன - III

இயமம் , நியமம்:
தவத்திற்கு அடிப்படையான ஆசனம் , பிரனாயாமத்தைப் போலவே இயமம், நியமமும் முக்கியமானதாகும் .

இயமம் என்பது தவிர்க்கப் பட வேண்டியது : அவை
1. பிற உயிர்களை துன்புறுத்தாமலிருத்தல்
2. பொய் பேசாமலிருத்தல்
3. பிறர் பொருளை அபகரிக்காமல் இருத்தல்
4. முறையற்ற பால்கவர்ச்சி கொள்ளாமலிருத்தல்
5. பிறர் பொருளை தாணமாகவும் பெறாமலிருத்தல்
ஆகிய ஐந்தும் ஆகும் .

நியமம் என்பது கைக்கொள்ள வேண்டியவை : அவை
1. மன மற்றும் உடலின் தூய்மை
2. நிறை மனம் அதாவது இருக்கின்ற சூழ்நிலையைக் கொண்டே மன நிறைவுடன் வாழ்தல்
3. உயர் வாழ்வு நெறிகளை (நேர்மை , தூய்மை , நல் அன்பு ) தேடிப் படித்தல் , கேட்டல்
4. உயர் வாழ்வு நெறிகளை வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுதல் ,
5. பிரபஞ்சப் பேராற்றலின்கன் நம்மை முழுமையாக ஒப்புவித்தல்
ஆகிய ஐந்தும் ஆகும் .

இவையெல்லாம் படிப்பதற்கு கடினமாகத் தோன்றினாலும் , கிடைத்தற்கரிய
இந்த மானுட பிறப்பை பயனுள்ளதாக்க எண்ணமிருப்பின் முறையான ஒரு குருவை நாடி வாரத்தில் ஒரு மணி நேர பயிற்சியும் மற்ற நாட்களில் வீட்டில் தினமும் ஒரு மணிநேர பயிற்சியும் மேற்கொண்டால் மிகவும் எளிதானதும் சந்தோசமானதும் தான் .
( இன்னும் சந்தோசிக்கலாம் .. .. .. )

Friday, November 13, 2009

மணமுடிக்க போவோற்கு

மணமுடித்து வாழுகின்ற
மக்களோ பலகோடி
மண்ணில்தான் நடக்கின்றார்
வானிலே பறப்பதில்லை

தேவ லோகத்து
தெவிட்டாத துணை வருமோ
கற்பனையில் கோட்டை கட்டி
காத்திருந்து மணமுடிக்க

எதார்த்தம் தண்டியொரு
எதிர்பார்ப்பு இருக்குமெனில்
உண்மை நிகழ்வுகளோ
உள்ளத்தை நெருடச் செய்யும்

மோகமது முப்பதுநாள்
ஆசையது அறுபதுநாள்
அதன் பின்னே வருவதெல்லாம்
அற்புதமாய் தோன்றது

என் காலில் நான் நிற்பேன்
உன் காலில் நீ நிற்பாய்
இணைந்து கைகோர்த்து
இனிமையாய் வாழ்ந்திடுவோம்

குறைகண்டு சுட்டினாலும்
நிறைகண்டு வாழ்த்திவிட
வாழ்க்கைத் தேர் அசையாமல்
வசந்தமாய் ஓடிவரும் .

யோகம் தவம் குறித்த எனது பதிவைக் காண இங்கே சொடுக்குங்கள்

Wednesday, November 11, 2009

ஓசோன்

ஏத்தளிறைக்க நிழல்
கிணத்தோரம் இரண்டு மரம் .
கலப்பை கட்டை வேணுமுன்னு
காட்டுக்குள்ளே நாலு மரம் .

மாடு கட்ட நிழல் வேண்டி
மறுபடியும் நாலு மரம் .
சாலையிலே அரசாங்கம்
சரமாக நட்ட மரம் .

ஊத்தெறைக்க பம்புசெட்டும்
உழவு செய்ய டேக்டரும்
நாலுவழிச் சாலை வந்து ,
நம்ம மரம் பாழாச்சு !

வாகனங்கள் பெருகியதில்
வரும் புகையும் கேடாச்சு !
ஓசோனில் ஓட்டயின்னா ...
சுற்றுச்சுழல் மாசு என்றால்...

தன் தலயில் மண்வாரி
தானே போட்டுக்கொண்டோம் !
இந்நிலையை மாற்றுதற்கு
எவரேனும் முயல்வாரோ ?

ஒரு பின்னூட்டத்தின் பதில்

Anonymous Said
ஏனய்யா, திருப்பி திருப்பி கவிதை எழுதியோ
அல்லது ஊருக்கு உபதேசம் செய்தோ வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களுக்கு
போர் அடிக்காதா?

பின்னூட்ட மிட்டவற்கு
பிரியமுடன் நன்றி சொல்வேன் .
எழுதுவதன் காரணம்தான்
என்னவென்று யோசிக்கவும் .

விளைவுகளின் பயன்குறித்து
விமர்சனம் பண்ணிடவும்
நல்லதோர் வாய்ப்பளித்த
நண்பர்க்கு நன்றி சொல்வேன்

பதின்மர் வயதினிலே
படித்திருந்தால் நான்கூட
இப்படித்தான் கேட்டிருப்பேன்
இறுமாப்பாய் ஒரு கேள்வி .

காதலும் காமமும்
கவர்ந்திழுக்கும் வயதினிலே
மற்றெல்லாம் வீனேன்று
மனம் நினைக்கும் அது உண்மை .

அம்மணமே அற்புதமாய்
அறிவிலே நிறைந்திருக்க
அதற்கு நிகர் ஏதுமில்லை
என நினைத்தேன் அது உண்மை .

தொடு உணர்வே உயிரென்று
துடித்த செல்கள் தேகமெங்கும்
நித்தியமாய் இருக்குமென
நினைத்திருந்தேன் ஒரு சமயம் .

நாட்கள் நகர்ந்து சென்று
நித்தியம் நிறமிழந்தபோது
சாசுவதம் எல்லாம்
சாதாரமாய் ஆக ...

அனைத்தையும் தாண்டிய
அசாதாரண மொன்று
எங்கோ இருக்குமென
என்னுள்ளே தோன்றியது .

தேடும் மார்க்கத்தை
துரிதமாக்கி விட்டேன் . - அது
மனதை துய்மையாக்கவேண்டும்
மற்றவரை மதித்துநடக்கவேண்டும்

எல்லோருக்கும் நல்லதே நினைக்கவேண்டும்
எதிரியையும் வாழ்த்தும் நிலை வேண்டும்
இப்படி நிறைய .... வேண்டும்களை - என்னுள்
போட்டுவிட்டுப் போய்விட்டது .

இந்த வானம் ஒரு
கூரையாய் தெரியும்
உலகின் சுபிட்சமே
உயிர் மூச்சாய் இருக்கும்

அலுத்துப் போகாத
அற்புத நிலையான
உண்ணதத்தை தேடும்
உயர்வான மார்க்கமிது .

இது ஒரு சுகம்
இணையற்ற சுகம்
அப்புறமேன் அலுத்துப் போகிறது ?

உங்களில் மனிதமிருந்தால்
நீங்களும் ஒரு நாள்
இங்கே நகர்வீர்கள் . . .

Monday, November 9, 2009

வாழ்க்கை




உழைத்துண்டு உறங்கி
உறவுகொண்டு பெற்று
வளர்த்து மணமுடித்து
வழ்க்கைஎது என்றால்

எதுவுமில்லை சும்மா -வெறும்
சுழற்சிஎனத் தோன்றும்
எதற்கிந்த சுழற்சி
யார்செயும் வேலை ?

இயற்க்கைஎனு மாற்றல்
இயல்பூக்கம் கொண்ட
பரிணாமம் என்றே
பலபேர்கள் சொல்வர் .

ஆற்றல்களம் அமுங்கி
அண்டவெளி யாச்சு
அதிலே உயிர் தோன்றி
ஆறரிவுமச்சு.

ஆறறிவின் மேலே ஓரறிவு உண்டா?
தவமிருந்து மனிதன் - அவ்
வாற்றளுணர் செயலே
பெரும்சுழற்சி மீண்டும்
பூரணமாய் ஆகும் .

பூரணத்தை உணர்ந்தோன்
பரிணாம முற்றாம்
அகுதிலார் எல்லாம்
பிழைத்தோரே யன்றி
வழ்ந்தோராய் ஆகார் .

Sunday, November 8, 2009

புத்தகம்




நல்லதை எடுத்துக்கொண்டு
அல்லாததை விட்டுவிட
சுத்தமாய் சுதந்திரத்தை
என்னிடத்தே விடுகின்றாய்

வற்புறுத்தித் திணிக்காமல்
வேண்டுவற்கே விசயம்சொல்வாய் .
எதுவேண்டுமோ எடுத்துக்கொள்ளென்று
ஏகாந்தமாகவே இருக்கின்றாய் .

எப்போது வேண்டுமோ பார்த்துக்கொள்ளென்று
யுகாந்திரமாய் காத்திருப்பாய்.
வாழ்ந்தவனும் வீழ்ந்தவனும்
உன்னுள்ளே தானடக்கம் .

வாழவழி தேடுவற்கும்
வழிஉன்னுள் தானிருக்கும் .
உலகத்து அறிவெல்லாம்
உன்னுள்ளே தவமிருக்கும் .

சமுதாய புரட்சியை நீ
சப்தமின்றி யேசமைப்பாய்.
உன்சொல் கேட்பவற்கே
உயர்வுண்டு வாழ்க்கையிலே .

உண்மையாய் அணுகுவோரை
உத்தமனாய் ஆக்கிடுவாய் .
சகவாசம் கொண்டவரை
சான்றோனாய் ஆக்கிடுவாய்

Wednesday, November 4, 2009

சோமாலியா




உணவின்றி ஒருகூட்டம் வாடுவதும் - அவர்
இரத்தத்தை உறிஞ்சி சிலர் வாழுவதும்
என்னேநம் மானிடத்தின் ஜீவிதங்கள்
மனமிறங்கா கல்நெஞ்சக் காவியங்கள்

இயற்கைவளம் நிறைந்திருக்கும் நாடுஅது
இளைத்திருப்போர் வாழ்ந்திருக்கும் காடுஅது
கொழுத்திருக்கும் கூட்டத்தார் அங்குசென்றே
இளைத்தாரை கசக்கிநல்ல பொருள்கொனர்வார்

பழங்குடிகள் வாழுகின்ற நாட்டினிலே - சிலர்
காப்பானைப் போலநல்ல வேடமிட்டே
களவாடும் கூட்டத்தார் கண்டீரோ - பலர்
உணவின்றி உயிர்துறத்தல் கேட்டீரோ

அறிவியலில் உயர்ந்தமென மார்தட்டி
அக்கம்பக்கம் சாவவர்மேல் நடந்துசெல்லும்
இழிநிலையை மனிதமென கொள்ளுவதோ !
இரங்கியொரு துணைசெய்ய வேண்டாமோ ?

Monday, November 2, 2009

குழந்தை



பிஞ்சுக்கால்களில் நெஞ்சில் உதைத்ததும்
கொஞ்சிக்குலாவையில் மண்டு வைத்ததும்
குதிரைநாநென முதுகில் அமர்ந்ததும்
குழலும்யாழுமாய் குழரிப்பேசளும்
பொக்கைசிரிப்பிலே உள்ளம் ஈர்த்ததும்
மெல்ல நடக்கையில் இடறி விழுந்ததும்
எத்தனை எத்தனை இன்பம் கண்டேன் - உன்
ஒவ்வொரு அசைவிலும் திலைத்திருந்தே.

Sunday, November 1, 2009

மதம்



எல்லோரும் இறைஞானம் பெறவேண்டும் என்றே
ஞானியர்கள் தோற்றுவித்த கோட்பாடே மதமாம்
எசுபுத்தர் முகம்மது போன்றோர்க ளெல்லாம்
தான்பெற்ற இறைஞானம் உலகம் பெறவேண்டி...

தத்தமது கோட்பாட்டை உலகுக்கு அளிக்க
தனித்தனியாய் மதமென்று வளர்ந்து வரலாச்சு
சாரத்தை விட்டுவிட்டே பின்வந்த சோதர்
சடங்கைமட்டும் வைத்துக்கொள்ள சச்சரவு ஆச்சு

ஆறெல்லாம் ஓடிவரும் கடல்தனை நோக்கி
மதமெல்லாம் இறையுனர்த்தும் அறியாமை போக்கி
இவ்வுண்மை உணராதோர் மதம் சார்ந்தேனேன்று
வன்முறையை கட்டவிழ்த்து மனிதத்தை கொல்வார்.

பாலையிலே வளர்ந்த மதம் தாவரத்தைக் காணா
சமவெளியில் வளர்ந்த மதம் மாமிசத்தை உண்ணா
இப்படித்தான் மதங்களிலே வேறுபாடு உண்டாம்
என்மதமே பெரிதுஎன கூச்சலிடும் மூடா...

அறியாத குழந்தைக்கு அகரமுத லெழுத்து
அதுபோலே வந்ததுவே கோவில்குல பூஜை
கற்றறிந்த சான்றோர்கள் கவியியற்றல் போலே
யோகம்தவம் செய்துயிறை உணர்வுபெற வேண்டும்

எல்லோரும் ஒர்குலமே என்றுணர வேண்டும்
ஓருலக கூட்டாட்சி தான்மலர வேண்டும்
இராணுவத்துச் செலவினங்கள் தேவையில்லா நிலையில்
மக்கள்நலம் பேணுதலில் சொர்க்கமிங்கே காண்போம்.

Monday, October 26, 2009

அம்மா



கருவாயிருக்கையில் எனை
கனவு கண்டவள்.
பிறக்காதிருக்குமுன்னே என்மேல்
பிரியம் கொண்டவள்.
என் நோய்க்கு விழித்திருந்து
வலி பொறுத்தவள் - என்
சாதனையில் சப்தமின்றி
கரைதிருப்பவள்.
சான்றோன் என கேட்க
காத்திருப்பவள்.
தனக்கென வாழாத
தகைமை கொண்டவள்.

Wednesday, October 21, 2009

நாம் எங்கே போகிறோம்


இந்த குழந்தை கண்டு

இதயத்தில் ரத்தம் வடிகிறது

தாயில்லை தந்தையில்லை

தனக்குற்றோர் யாருமில்லை ...

அநாதை சிறுவனிடம்

அடைக்கலமாய் ஒரு குழந்தை !

விதியின் கதை தன்னை

விலா எலும்பு சொல்கிறது ...

மனித குலத்தின்

மகத்தான பொக்கிசங்கள் !

தெருவோர காடுகளில்

திக்கின்றி கிடப்பதுவோ

மனித குல வளர்ச்சிக்கு

மகத்தான உதாரணம் !

நேயத்தை கொன்றுவிட்டு

நீசராய் வாழுவதோ !

இதயமில்லா மனிதர்களை

இறைவன் படைத்தானோ ?


-இவன் வி.என்.தங்கமணி

உங்கள் கருத்தை தமிழில் தெரிவிக்க கீழ் உள்ள தளத்திற்கு சென்று டைப் செய்து
http://www.google.co.in/transliterate/indic/Tamil காப்பி செய்து கமன்ட்க்கான பகுதியில் பேஸ்ட் செய்யவும்

Tuesday, October 20, 2009

உழைப்பு


பூமியை புரட்டி போடும்
பூவையர் கூட்டம் இவர்கள்
மனித குலத்தின் பசிக்கு
மருந்து தேடும் மாதர்
இவர்க்கு யாரும் உண்டோ
இசைந்த பட்டம் கொடுக்க .

இடையும் தொடையும் காட்டி
அட்டை படத்தில் நிற்பர்
அரசும் புரசும் சேர்ந்து
பட்டம் சிலவும் கொடுப்பார் .

உழைக்கும் மனிதர் தம்மை
உலகோர் மதிததுண்டா
-இவன் வி. என்.தங்கமணி

Wednesday, October 14, 2009

இன்பத்தை தேடி

பச்சை புல்வெளிகள்
பரந்துயர்ந்த மரக்கூட்டம்
இனியமன மலர் செடிகள்
இசைஎளுப்பும் பறவைகளும்

தெள்ளியநல் நீரோடை
தெவிட்டாத கனிவகைகள்
எல்லாவும் சுகம் தரவே
இறைவன் படைத்துள்ளான்
மனிதர்கள் எப்போதும்
மன நிறைவு இல்லாமல்
எதையோ தேடி எங்கோ
எந்நாளும் ஓடுகிறார்
-இவன் V.N.Thangamani

Thursday, October 8, 2009

இருக்க நினைத்தது

இருக்க நினைத்ததென்னவோ
இப்படித்தான் கண்ணே - ஆனால்
மறக்க நினைத்தாலும்
முடியவில்லை உன்னை .