Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Sunday, November 29, 2009

சுழற்சி



சுக்கிலமும் சுரோணிதமும் -ஒரு
புள்ளியில் தான் சந்தித்தன.
பிறக்கையிலே இரண்டுகிலோ
பின்னெப்படி பெரிதானோம்.

மண்ணிலே விளையாத
மற்றேதும் உண்டதில்லை
மண்ணீரும் காற்றுவெப்பம்
விண்சேர்ந்து உண்டான

பொருளேதான் நாமுண்டு
பெரிதாக வளர்ந்து நிற்போம்.
பஞ்சபூத மல்லாது
வேறொன்றும் நாமல்ல .

இரத்தமும் சதயாக்கி
கொழுப்பாக்கி எழும்பாக்கி
மச்சையாக்கி மூலயாக்கி
சுக்கிலமும் சுரோணிதமும்

மற்றுமொரு பிறப்பாக்கும்
வேலையை செய்வது யார்.
பேராற்றல் ஒன்றுண்டு - அது
எங்கும் நிறைந்துண்டு.

மனிதஉடல் மரித்தபின்னே
மறுபடியும் மண்ணாகும்.
சுழற்சிதான் எல்லாவும்
அணுமுதல் அண்டம்வரை.

Friday, November 13, 2009

மணமுடிக்க போவோற்கு

மணமுடித்து வாழுகின்ற
மக்களோ பலகோடி
மண்ணில்தான் நடக்கின்றார்
வானிலே பறப்பதில்லை

தேவ லோகத்து
தெவிட்டாத துணை வருமோ
கற்பனையில் கோட்டை கட்டி
காத்திருந்து மணமுடிக்க

எதார்த்தம் தண்டியொரு
எதிர்பார்ப்பு இருக்குமெனில்
உண்மை நிகழ்வுகளோ
உள்ளத்தை நெருடச் செய்யும்

மோகமது முப்பதுநாள்
ஆசையது அறுபதுநாள்
அதன் பின்னே வருவதெல்லாம்
அற்புதமாய் தோன்றது

என் காலில் நான் நிற்பேன்
உன் காலில் நீ நிற்பாய்
இணைந்து கைகோர்த்து
இனிமையாய் வாழ்ந்திடுவோம்

குறைகண்டு சுட்டினாலும்
நிறைகண்டு வாழ்த்திவிட
வாழ்க்கைத் தேர் அசையாமல்
வசந்தமாய் ஓடிவரும் .

யோகம் தவம் குறித்த எனது பதிவைக் காண இங்கே சொடுக்குங்கள்

Wednesday, November 11, 2009

ஒரு பின்னூட்டத்தின் பதில்

Anonymous Said
ஏனய்யா, திருப்பி திருப்பி கவிதை எழுதியோ
அல்லது ஊருக்கு உபதேசம் செய்தோ வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களுக்கு
போர் அடிக்காதா?

பின்னூட்ட மிட்டவற்கு
பிரியமுடன் நன்றி சொல்வேன் .
எழுதுவதன் காரணம்தான்
என்னவென்று யோசிக்கவும் .

விளைவுகளின் பயன்குறித்து
விமர்சனம் பண்ணிடவும்
நல்லதோர் வாய்ப்பளித்த
நண்பர்க்கு நன்றி சொல்வேன்

பதின்மர் வயதினிலே
படித்திருந்தால் நான்கூட
இப்படித்தான் கேட்டிருப்பேன்
இறுமாப்பாய் ஒரு கேள்வி .

காதலும் காமமும்
கவர்ந்திழுக்கும் வயதினிலே
மற்றெல்லாம் வீனேன்று
மனம் நினைக்கும் அது உண்மை .

அம்மணமே அற்புதமாய்
அறிவிலே நிறைந்திருக்க
அதற்கு நிகர் ஏதுமில்லை
என நினைத்தேன் அது உண்மை .

தொடு உணர்வே உயிரென்று
துடித்த செல்கள் தேகமெங்கும்
நித்தியமாய் இருக்குமென
நினைத்திருந்தேன் ஒரு சமயம் .

நாட்கள் நகர்ந்து சென்று
நித்தியம் நிறமிழந்தபோது
சாசுவதம் எல்லாம்
சாதாரமாய் ஆக ...

அனைத்தையும் தாண்டிய
அசாதாரண மொன்று
எங்கோ இருக்குமென
என்னுள்ளே தோன்றியது .

தேடும் மார்க்கத்தை
துரிதமாக்கி விட்டேன் . - அது
மனதை துய்மையாக்கவேண்டும்
மற்றவரை மதித்துநடக்கவேண்டும்

எல்லோருக்கும் நல்லதே நினைக்கவேண்டும்
எதிரியையும் வாழ்த்தும் நிலை வேண்டும்
இப்படி நிறைய .... வேண்டும்களை - என்னுள்
போட்டுவிட்டுப் போய்விட்டது .

இந்த வானம் ஒரு
கூரையாய் தெரியும்
உலகின் சுபிட்சமே
உயிர் மூச்சாய் இருக்கும்

அலுத்துப் போகாத
அற்புத நிலையான
உண்ணதத்தை தேடும்
உயர்வான மார்க்கமிது .

இது ஒரு சுகம்
இணையற்ற சுகம்
அப்புறமேன் அலுத்துப் போகிறது ?

உங்களில் மனிதமிருந்தால்
நீங்களும் ஒரு நாள்
இங்கே நகர்வீர்கள் . . .

Monday, November 9, 2009

வாழ்க்கை




உழைத்துண்டு உறங்கி
உறவுகொண்டு பெற்று
வளர்த்து மணமுடித்து
வழ்க்கைஎது என்றால்

எதுவுமில்லை சும்மா -வெறும்
சுழற்சிஎனத் தோன்றும்
எதற்கிந்த சுழற்சி
யார்செயும் வேலை ?

இயற்க்கைஎனு மாற்றல்
இயல்பூக்கம் கொண்ட
பரிணாமம் என்றே
பலபேர்கள் சொல்வர் .

ஆற்றல்களம் அமுங்கி
அண்டவெளி யாச்சு
அதிலே உயிர் தோன்றி
ஆறரிவுமச்சு.

ஆறறிவின் மேலே ஓரறிவு உண்டா?
தவமிருந்து மனிதன் - அவ்
வாற்றளுணர் செயலே
பெரும்சுழற்சி மீண்டும்
பூரணமாய் ஆகும் .

பூரணத்தை உணர்ந்தோன்
பரிணாம முற்றாம்
அகுதிலார் எல்லாம்
பிழைத்தோரே யன்றி
வழ்ந்தோராய் ஆகார் .