யோகம்
யோகம் என்பது தவம் செய்ய ஏதுவான வகையில் உடலையும் உடலின் உள் அவயங்களையும் தயார் செய்யும் பயிற்சியே யோகம் ஆகும் . யோகத்தில் ஆசனம் , பிராணயாமம் முக்கியமானதாகும்.
ஆசனம் தவம் செய்ய நீண்ட நேரம் ஒரு நிலையில் அமரவேண்டும் . அவ்வாறு அமர்ந்திருக்கும்போது உடலின் எந்த இடத்திலும் உறுத்தலோ வலியோ ஏற்படக்கூடாது. அவ்வாறு உறுத்தலோ வலியோ ஏற்பட்டால் தவத்தில் முழு மனமும் லயிக்காது. தவம் செய்ய இடையூறு ஏற்படா வண்ணம் அமரும் முறையே ஆசனம் எனப்படுகிறது.
பிரணாயாமம் உடலின் மூல ஆற்றல் உடலெங்கும் 72000 நாடிகளின் வழியாக பரவுவதாக சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை மூலத்திலிருந்து மூன்றாகப் பிரிந்து, பின்பு அவை பலகிளைகளாக பிரிந்து ஆற்றலை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது . அந்த முக்கிய மூன்று நாடிகளை இடகலை, பிங்கலை, சுழுமுனை (இவற்றை சந்திர கலை, சூரிய கலை, சுசும்னா ) என்பர். இவை முதுகு தண்டில் முறையே இடது, வலது, நடு மையத்தில் கீழிருந்து மேலாக செல்கிறது. சாதாரணமாக நாம் முச்சு விடும்போது இடது நாசித்துவாரத்தின் மூலமோ அல்லது வலது நாசித்துவாரத்தின் மூலோமோ தான் காற்று செல்லும். இடது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் இடகலை நாடியின் மூலமும், வலது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் பிங்கலை நாடியின் மூலமும், இரண்டு நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் சுழுமுனை நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. ஆற்றல் சுழுமுனை நாடி வழியாக பரவும் போதுதான் நாளமில்லா சுரப்பிகள் நன்முறையில் செயல்பட்டு உடலில் (cosmic energy) வான் காந்த ஆற்றல் கிரகிக்கப் படுகிறது. இதற்காகவே நாடிசுத்தி, தண்டுவட சுத்தி ஆகிய பிராணாயாம பயிற்சிகள் அவசியமாகிறது.
13 comments:
பயனுள்ள பதிவு.. !
முதல் பின்னூட்டமிட்ட பிரியாவுக்கு நன்றி.
புதிதாய் வந்துள்ள followers அனைவருக்கும், வந்தனமும். வாழ்த்துக்களும்
பயனுள்ளப் பதிவு நன்றி !
சொல்லிட்டீங்க மணி.வாசிக்க நல்லாத்தான் இருக்கு.
செய்யணுமே.நேரமும் வேணுமே !
நல்ல பதிவு, யோகம், மற்றும் மன அமைதி போன்றவற்றில் ஈடுபாடு உள்ள நானும் இனி தங்களின் பதிவுகளைப் படிக்கின்றேன். நன்றி.
///பின்நூட்டத்திருக்கு நன்றி கேசவன்.
//// நன்றி ஹேமா, உங்கள் கருத்துக்கு விரிவான பதில், கவிதாவின் பார்வையில் (http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/11/blog-post_16.html )இருக்கிறது பாருங்கள் உடல், மன ஆரோக்கியத்திற்காக இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒரு அரை மணி ஒதுக்குங்கள்.
/// பித்தனின் வாக்கு அய்யா , தங்கள் வரவு நல்வரவு ஆகுக. நன்றி.
புதிய தகவல் ... நல்ல பகிர்வு,
வாழ்த்துக்கள்.
பயனுள்ள பதிவு.. !
அருமையான பதிவு ஐயா.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
/// சி. கருணாகரசு said...
புதிய தகவல் ... நல்ல பகிர்வு,
வாழ்த்துக்கள்.
/// தியாவின் பேனா said...
பயனுள்ள பதிவு.. !
/// manogkaran krishnan said...
அருமையான பதிவு ஐயா.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அனைவருக்கும் நன்றி.
வந்தனமும். வாழ்த்துக்களும்
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல நல்ல ஆரோக்கியவாழ்க்கைக்கு
ஆயிரமாயிரம் நல்ல வழிகளை நமக்கு
வகுத்துத் தந்திருக்கிறார்கள் அதை மூட நம்பிக்கை வழியினில் செல்லாமல் நல்ல நலமான வாழ்க்கையிலே இந்த சமூகம் வீறு நடைபோட எத்தனையோ
நல்லபழக்க வழக்கங்களை நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவைத்து இருக்கிறார்கள் அதை நாம் முறையே கற்று நல்ல சமூகத்தை உருவாக்க முயல்வோமாக!
நன்றி தமிழ் பாலா
வாழ்க வளமுடன்
Post a Comment