Saturday, November 14, 2009

தவத்தால் என்ன கிடைக்கும்- II



எதுவும் கிடைக்கும். பணத்தாலும், படிப்பாலும் பதவியாலும் கிடைக்காத உன்னதங்கள் கூட தவத்தால் கிடைக்கும். இதை சின்ன உதாரணத்துடன் விளக்கினால் எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.


மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் விட்ட மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்த (வேதாத்ரியம் ) தியான முறையும், கோட்பாடுகளும் இன்று உலகில் பல்வேறுநாடுகளில் பல்வேறுமக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.


கோவை பாரதியார் பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், போன்ற பல்கலைக் கழகங்கள் எல்லாம் அவர் கற்றுக்கொடுத்த தியான முறைகளையும் அவர் எழுதிய நூல்களையும் வைத்து பட்டைய படிப்பு , இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை தொடங்கி நடத்தி வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் இவருடைய தியான முறைகளை கற்றுத்தர முயற்ச்சிகள் நடந்து கொண்டுள்ளது. ஐ.நா சபை இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதியை உலக சமாதான நாளாக அறிவித்துள்ளது.


மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த வறுமையில் வாடிய ஒருவரால் எப்படி இந்த அளவு உலகுக்கு பயனுள்ள யோகா முறைகளையும், விளக்கங்களையும் உருவாக்க முடிந்தது. பணத்தாலா? படிப்பாளா? பதவியாலா? இல்லை .தவம்... தவத்தால்... (மகான் வேதாத்திரி மகரிஷியின் இயக்கத்தைப்பற்றி மேலும் அறிய http://www.vethathiri.org/ தளத்தில் காணுங்கள் )

**********தவத்தால் என்ன கிடைக்கும்- I **************
எதுவும் கிடைக்கும். பணத்தாலும், படிப்பாலும் பதவியாலும் கிடைக்காத உன்னதங்கள் கூட தவத்தால் கிடைக்கும். இதை சின்ன உதாரணத்துடன் விளக்கினால் எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

எழுதப்படிக்க தெரியாத, பணம், பதவி இல்லாத இராமகிருஷ்ணர்தான் உலகமே வியந்து திரும்பி பார்த்த விவேகானந்தரை உருவாக்கினார். அவ்வாறு உலகம் போற்றும் ஞானியை உருவாக்குமளவு ஞானம் அவருக்கு எங்கே இருந்து வந்தது? தவம், தவதாலேயே அது சாத்தியமாயிற்று.


நூறு ஆண்டுகளுக்கு முன்னரே (11.09.1893) உலக சர்வமத மாநாட்டில் உலகம் வியந்து போற்றுமளவு விவேகானந்தர் பேசியதன் சாராம்சம்தான் என்ன? உலகெங்கும் ஆறுகள் பல இடங்களில் தோன்றினாலும் அவையாவும் கடலையே சென்று அடைவதைப் போல் உலகெங்கும் உள்ள மதங்கள் யாவும் பல்வேறு இடங்களில் பல்வேறு கோட்பாடுகளுடன் விளங்கினாலும் அவையாவும் இறைவன் என்ற ஒரே பேராற்றலை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தத்தம் மதமே பெரிது என்ற எண்ணத்துடன் இருந்த உலக மக்கள் அனைவரும் மறுக்க முடியாத இறைப்பேராற்றளின் குரலாகவே இது ஒலித்தது. ( இன்றும் தன் மதமே பெரிது எனப் பேசுபவர்களை திருத்த பல விவேகானந்தர்கள் வேண்டும் )

பேராற்றளுடன் மதம் பற்றிய கருத்துக்களில் உலகையே உலுக்கிக் காட்டிய விவேகானந்தரும் அவரை உருவாகிய இராமகிருஷ்ண பரமகம்சரும் தவத்தாலே அவ்வாற்றலைப் பெற்றார்களேயன்றி பணத்தாலோ பதவியாலோ அல்ல.

( தவம் தொடரும்... )



3 comments:

கலகலப்ரியா said...

//லகையே உலுக்கிக் காட்டிய விவேகானந்தரும் அவரை உருவாகிய இராமகிருஷ்ண பரமகம்சரும் தவத்தாலே//

உண்மைதாங்க... தொடருங்க.. நல்லா இருக்கு..

நிகழ்காலத்தில்... said...

எல்லா மனிதராலும் மகான் ஆக முடியும் என உறுதியாக சொல்லி செயல்படுத்தியவர் வேதாத்திரி மகான்

அவரை தாங்கள் இங்கு குறிப்பிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்


வாழ்த்துக்கள்..

தேவன் said...

நல்ல கருத்துக்கள் நன்றி.