தவம் பற்றி ஆய்வதன் இடையே மனம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
மனதிலே திடீர் திடீரென்று ஒவ்வொரு எண்ணங்களும் வருகிறது . அது எங்கிருந்து வருகிறது ? எப்படி வருகிறது என்று நமக்குத் தெரிவதில்லை . ஒரு பொருளை நான்குபேர் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் வருகிறது . ஒரு குதிரையைப் பார்க்கிறோம் . ஒருவருக்கு ஏறி சவ்வாரி செய்யவும் , ஒருவருக்கு அதன் அழகை ஓவியமாக வரையவும் , ஒருவருக்கு அதைப் பற்றி கவிதை எழுதவும் தோன்றுகிறது .

எண்ணம் எழ புறப் பொருளான குதிரை காரணமென்றல் எல்லோருக்கும் ஒரே எண்ணம் தான் வரவேண்டும் . ஆனால் வேறுவேறு எண்ணம் வரக் காரணம் என்ன ? நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றுதான் எண்ணத்தை ஏற்படுத்துகிறது .
அது என்ன ? நாம் இதுவரை பார்த்தது , கேட்டது , சுவைத்தது நுகர்ந்தது , உணர்ந்தது மற்றும் நம் பெற்றோரின் அனுபவங்கள் ஆகியவை நம் உயிர் (கரு) மையத்தில் பதிவாகி இருக்கிறது . உயிர் மையத்திலிருந்து எழும் அலையே மனம் ஆகும் . மனதின் மலர்ச்சியே எண்ணமாகும் . அப்படி மலரும் எண்ணத்தில் மேற்படி பதிவுகளின் தன்மையனைத்தும் இருக்கும் .
ஏற்கனவே இருக்கும் பதிவுகளை தூண்டிவிடும் கருவியாக மட்டும் புறப்பொருள்கள் இருக்கின்றன. உள்ளே உள்ள பதிவுகள் நல்ல பதிவுகளாக இருந்தால் நல்ல எண்ணங்களும் . கெட்ட பதிவுகளாக இருந்தால் கெட்ட எண்ணங்களும் வரும் . இதையே “சட்டியில் உள்ளதே அகப்பையில் வரும் ” என்று பழமொழியாகக் கூறுவார் . சரி சட்டியில் உள்ள கெட்டதை நீக்கிவிட்டு நல்லதைப் எப்படிப் போடுவது ?
( ம்ம்ம் …. நாளைக்குப் போடலாம் ….)
( ம்ம்ம் …. நாளைக்குப் போடலாம் ….)
2 comments:
மணி,இன்னும் சொல்லுங்கள்.
ம்...ம்... கொட்டிக் கேட்கும் குழந்தையாகிக் கேட்டபடி இருக்கிறேன்.
நன்றி ஹேமா
"குழந்தை" என்ற கவிதையை படித்துவிட்டு நாங்களும் குழந்தையாகி விடலாம் என்று எழுதினீர்கள்.
மனமிருந்தால் ஆகலாம் என்றேன். இன்று "மனம்" படித்துவிட்டு குழந்தயாகிவிட்டேன் என்கிறீர்கள்.சந்தோசம் ஹேமா.
சரியான பாதையில்தான் போகிறோம். வாழ்கவளமுடன்.
Post a Comment