Monday, November 23, 2009

தவம் என்றால் என்ன - V


மனத்தூய்மை :

மனதை எவ்வாறு தூய்மைப் படுத்துவது ? இந்தக் கேள்வியே தவறு . கருமையத்தை எவ்வாறு தூய்மைப் படுத்துவது என்பதே சரி . கருமையத்திலிருந்து எழும் அலைதானே மனம் . அதன் மலர்சிதானே எண்ணம் . கருமையத்தில் நமது அனுபவம் , நமது மூதாதையர் அனுபவங்கள் , ஏன் பரிணாமத்தில் நாம் பெற்ற அனுபவங்கள் எல்லாமே பதிவாக இருக்கிறது . அவைகள் தான் சூழ்நிலைகளுக்கேற்ப மனமாக / எண்ணமாக வெளிப்படுகிறது .


இப்பொழுது நீங்கள் படித்த ஆரம்ப பாடசாலையை நினைத்துக்கொள்ளுங்கள் . அப்போதைய ஆசிரியர் ஒருவரையும் நினைத்துக்கொள்ளுங்கள் . நினைவுக்கு வருகிறது அல்லவா ! உங்களுக்குள் அதன் பதிவு இல்லாமல் எப்படி நினைவுக்கு வரமுடியும் . இவனுடைய பேச்சு செயல் எல்லாமே இவனுடைய தாத்தாவை போலவே இருக்கிறது என்கிறார்களே ! எப்படி ? மூதாதையரின் அனுபவங்கள் எல்லாம் கருமூலமாக நம் கருமையதிற்கு வந்ததால்தான் .
பல பிறவிகளாக ,பல நாள் அனுபவங்களாக பதிவானவற்றை உடனே அழித்தலோ மாற்றுதலோ இயலாதுதான் . ஆனால் தொடர்ந்த இடைவிடாத பயிற்சியின் மூலம் கருமையத்தை தூய்மைப் படுத்த இயலும் .
நல்லதே எண்ணுதல் , நற்காரியங்கள் நடைபெற வேண்டும் என்று சங்கல்பம் செய்தல் , எல்லா உயிர்களும் சுபிட்சமாக வாழவேண்டும் என்று வாழ்த்துதல் , எதிரியும் மனம் திருந்தி நல்வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்துதல் இவ்வாறு கருமையம் தூய்மையடைய வேதாத்ரிய ( SKY -Simplified Kundalini Yoga http://www.vethathiri.org/ ) தவ முறையில் அற்புதமான பயிற்சிகள் வழங்குகிறார்கள் .
தினந்தோறும் சிறிது நேரம் இந்த பயிற்சிகள் செய்துவர நமது கருமையம் தூய்மையடைகிறது . அதை நமது மனதில் மலரும் எண்ணங்களில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டே அறியலாம் .
ஞானியர்கள் இதுகுறித்து ஒரு கதை ஓன்று சொல்வதுண்டு . ஒரு குரு தன் சீடர்கள் இரண்டு பேரிடம் ஒரு குடத்தைக் காட்டி அதற்குள் என்ன இருக்கிறது என்றாராம் . ஒரு சீடர் ஒன்றுமில்லை என்றாராம் . இன்னொருவர் அதற்குள் காற்று இருக்கிறது என்றாராம் . குரு அந்தக்காற்றை வெளியே எடுக்க முடியுமா ? என்றாராம் , ஒரு சீடர் முடியாது என்றாராம் . மற்றொருவர் , முடியும் குருவே என்றாராம் . அப்படியானால் கற்றை வெளியே எடுபார்க்கலாம் என்றாராம் . அந்த சீடர் வேறொரு பானையில் தண்ணீர் கொண்டுவந்து அந்த பானை நிறைய ஊற்றி விட்டு , இப்பொழுது காற்றுமுழுவதையும் வெளியே எடுத்துவிட்டேன் என்றாராம் . இதன் கருத்து கருமையத்தில் நல்லதைப் போட்டால் அல்லாதது ஓடிவிடும் .
( நல்லதைப் போடுவோம் . . . .)

6 comments:

தேவன் said...

/// காற்றுமுளுவதையும் வெளியே எடுத்துவிட்டேன் ///

அருமை ! கதைகளுடன் விளக்கும் போதுதான் அதன் வெளிப்பாடு நன்றாக இருக்கிறது.

V.N.Thangamani said...

கருத்துக்கு நன்றி நண்பரே ,
இயன்றளவு கதைகளுடன் விளக்க முயற்சிக்கிறேன்.
வாழ்க வளமுடன்.

அன்புடன் நான் said...

சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது... தொடர்க அய்யா.

V.N.Thangamani said...

கருத்துக்கு நன்றீங்க கருணாகரசு அய்யா.
வாழ்க வளமுடன்.

ஹேமா said...

குட்டிக் கதையோடு விளக்கம்.
இன்னும் வாசிக்கிறேன் மணி.வீட்டில்

உறவுகளின் வருகை.ஒரு வாரம் இணையம் கொஞ்சம் இடைஞ்சல்தால்.

மொழிவேந்தன் வந்திருக்கிறார்.
ஏதேனும் உதவி தேவையா ?

Haripriya said...

நான் தற்பொழுது வேதாத்ரி மகரிஷி அவர்களின் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளேன். தங்களின் தவம் பற்றிய தொடர் மிகவும் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
வாழ்க வையகம்.
வாழ்க வையகம்.
வளமுடன் வளமுடன்.