இன்று பலரை துண்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய் (Back Pain) என்று சொல்லப்படும் முதுகுவலி. இந்த வலிக்கான காரணமாகக் கூறப்படும் எலும்பு தேய்மானம் ஜவ்வு தேய்மானம் என்பது பெரும்பாலும் உண்மையான காரணமல்ல. பெரும்பாலான முதுகுவலிக்கு காரணம் வாயு (Gas) ஆகும். உங்களுக்கு வலி ஒரே இடத்தில் அல்லாமல் ஒரு சில நாட்களில் சற்று இடம் மாறி வலித்தால் அதற்கு காரணம் வாயுவேதான்.
அதிகமாக உண்பதால் ஜிரணித்தது போக மீதமுள்ள உணவு குடலில் புளித்துப் போய் ஒருவித வாயு உண்டாகிறது. இந்த வாயு ஏப்பமாக, கொட்டாவியாக, அபானவாயுவாக வெளியேறாவிட்டால் உயிராற்றல் பரவக்கூடிய நாடிகளில் நுழைந்து ஆற்றல் பரவுவதில் ஒரு தடை ஏற்படுகிறது. அந்த தடையே வலியாக உணரப்படுகிறது. இந்த வாயு நாடிகளில் நகர்ந்து இடம் மாறும் வாய்ப்பு உள்ளதால் வலியும் இடம் மாறுகிறது.
இந்த வலியை தவிர்க்க ஐந்து விக்ஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1. உணவு
இன்னும் இரண்டு கை சாப்பிட்டால் போதும் என்கிற போதே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பாட்டை வாயில் போட்டதும் வெளிக்காற்று வாயில் புகாதவாறு உதடுகளை மூடிக்கொண்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். உண்ணும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.
2. படுக்கை
பஞ்சு போன்ற மெத்தைகளைத் தவிர்க்கவும். கயிற்றுக் கட்டிலானால் கயிறு தொங்கலாக இருப்பதைத் தவிர்க்கவும். தரையில் பாய் விரித்து தலையணை வைத்துப்படுப்பது நலம். நாம் புரண்டு படுக்கும் போது வயிற்றுக்கு ஓரளவு அழுத்தம் கிடைக்க வேண்டும். அதனால் வாயு ஏப்பமாக அபான வாயுவாக வெளியேறிவிடும்.
3. எண்ணெய் குளியல்
வருடத்திற்கு நான்கு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இதனால் முட்டு எலும்புகளில் உள்ள ஜவ்வுகளுக்கு போதுமான அளவு உராய்வுத் தன்மையைத் தாங்கக்கூடிய வளவளப்புத் தன்மை கிடைக்கும். ஜவ்வு தேய்வதில்லை, வரட்சித் தன்மையாலேயே வலி உண்டாகிறது.
4. உடற்பயிற்சி
வேதாதத்ரிய யோகத்தில் படுத்துக் கொண்டு செய்யக்கூடிய மகராசனப் பயிற்சியும் சூரிய நமஸ்காரப் பயிற்சியும் செய்தால் முதுகுவலி மூட்டு வலி நீங்கும்.
5. உட்க்காரும் பொழுது எப்பொழுதும் நிமிர்ந்து உட்க்கார வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் மாலை 3 மணி முதல் ஐந்து மணிக்குள் ஒரு இருபது நிமிடம் முதுகில் வெயில் படுமாறு நிற்பது நலம். தினமும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
உடலிலிருந்து பலகோடி செல்கள் உதிர்வது போலவே பல கோடி செல்கள் உற்பத்தியும் ஆகிறது. எனவே எழும்பு, ஜவ்வு தேய்மானம் என்பது இல்லை. அவ்வாறாயின் ஜல்லி உடைக்கும் தொழிலில் உள்ளவர்களின் கைகள் பொழுதெல்லாம் இயங்குவதால் தனித்தனியாகக் கழன்று விடும். ஸ்கேன் செய்து பார்த்து முதுகில் சதைக்கட்டி அல்லது நீர்க்கட்டி இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யலாம். இல்லையென்றால் மேலே சொன்ன ஐந்தையும் கடைபிடித்து நோய் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.
வாழ்க வளமுடன்.
.