Sunday, November 1, 2009

மதம்



எல்லோரும் இறைஞானம் பெறவேண்டும் என்றே
ஞானியர்கள் தோற்றுவித்த கோட்பாடே மதமாம்
எசுபுத்தர் முகம்மது போன்றோர்க ளெல்லாம்
தான்பெற்ற இறைஞானம் உலகம் பெறவேண்டி...

தத்தமது கோட்பாட்டை உலகுக்கு அளிக்க
தனித்தனியாய் மதமென்று வளர்ந்து வரலாச்சு
சாரத்தை விட்டுவிட்டே பின்வந்த சோதர்
சடங்கைமட்டும் வைத்துக்கொள்ள சச்சரவு ஆச்சு

ஆறெல்லாம் ஓடிவரும் கடல்தனை நோக்கி
மதமெல்லாம் இறையுனர்த்தும் அறியாமை போக்கி
இவ்வுண்மை உணராதோர் மதம் சார்ந்தேனேன்று
வன்முறையை கட்டவிழ்த்து மனிதத்தை கொல்வார்.

பாலையிலே வளர்ந்த மதம் தாவரத்தைக் காணா
சமவெளியில் வளர்ந்த மதம் மாமிசத்தை உண்ணா
இப்படித்தான் மதங்களிலே வேறுபாடு உண்டாம்
என்மதமே பெரிதுஎன கூச்சலிடும் மூடா...

அறியாத குழந்தைக்கு அகரமுத லெழுத்து
அதுபோலே வந்ததுவே கோவில்குல பூஜை
கற்றறிந்த சான்றோர்கள் கவியியற்றல் போலே
யோகம்தவம் செய்துயிறை உணர்வுபெற வேண்டும்

எல்லோரும் ஒர்குலமே என்றுணர வேண்டும்
ஓருலக கூட்டாட்சி தான்மலர வேண்டும்
இராணுவத்துச் செலவினங்கள் தேவையில்லா நிலையில்
மக்கள்நலம் பேணுதலில் சொர்க்கமிங்கே காண்போம்.

12 comments:

கலகலப்ரியா said...

சாட்டையடி.. ரொம்ப நல்லா இருக்குங்க..

ஷைலஜா said...

என் பதிவுல மடல்கண்டதும் வந்தேன்
நல்லபதிவு இது அதிலும் மதநல்லிணக்கக்கவிதை ஆகவே கூடுதல் சிறப்பு

V.N.Thangamani said...

கருத்துக்கு நன்றி பிரியா , சைலஜா அம்மா.

ஹேமா said...

மணி,உங்கள் சமூகச் சிந்தனையும் ஒருமைப்பாடும் வரிகளில் தெரிகிறது.நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்.

ஈ ரா said...

நன்றாக இருக்கிறது தோழரே

அன்புடன் நான் said...

பாலையிலே வளர்ந்த மதம் தாவரத்தைக் காணா
சமவெளியில் வளர்ந்த மதம் மாமிசத்தை உண்ணா
இப்படித்தான் மதங்களிலே வேறுபாடு உண்டாம்
என்மதமே பெரிதுஎன கூச்சலிடும் மூடா...//

அருமை... பாராட்டுக்க‌ள்.

vasu balaji said...

மதம் குறித்து புதிய நோக்கு. முடிவில் அருமையான கருத்து. பாராட்டுக்கள்.

VISA said...

சொல்வளம் மிக்க கவிதை. கருத்தோடு நான் ஒத்துபோகிறேன். எங்கெல்லாம் மதத்தின் பெயரால் சக மனிதனுக்கு தீங்கு இளைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சைத்தான் வாழ்கிறான்.

V.N.Thangamani said...

அன்புள்ளம் கொண்ட ஹேமா, ஈரா, சி.கருணாகரசு, வானம்பாடிகள் , விசா
ஆகியோர்களின் பின்னுட்டங்களுக்கு நன்றி.

Rajasurian said...

//பாலையிலே வளர்ந்த மதம் தாவரத்தைக் காணா
சமவெளியில் வளர்ந்த மதம் மாமிசத்தை உண்ணா
இப்படித்தான் மதங்களிலே வேறுபாடு உண்டாம் //


அற்புதமான வரிகள்.
சாதிவிட்டே வெளி வராத நாம் மதம் தாண்டி வளர்வது எப்போது.

V.N.Thangamani said...

நிச்சயம் வளர்வோம் ராஜசூரியன். நம்புவோம் விதைப்போம் நல்லதையே.
என்றேனும் முளைக்கும் தலைக்கும் வளரும்.

சுரேகா.. said...

//பாலையிலே வளர்ந்த மதம் தாவரத்தைக் காணா
சமவெளியில் வளர்ந்த மதம் மாமிசத்தை உண்ணா
இப்படித்தான் மதங்களிலே வேறுபாடு உண்டாம்
என்மதமே பெரிதுஎன கூச்சலிடும் மூடா...//

ஆஹா..அற்புதமான வரிகள்.
மதங்கள் புவியியல் அடிப்படையில் தன்னை அமைத்துக்கொண்டுள்ளதை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.