Monday, November 16, 2009

தவம் என்றால் என்ன ?

தவம் என்றால் மனதை அடக்குதல். மன ஆற்றலை அதிகப்படுத்துதல் என்பது அல்ல. தவம் என்றால் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும் உருவாக காரணமான மூல ஆற்றலை பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன் படுதலுமே தவம் ஆகும்.

அந்த ஆற்றல் எங்கும் நிறைந்தே இருக்கிறது. நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் நிறைந்தே இருக்கிறது. அதை உணர்வதற்கு மனதை கடந்து செல்ல வேண்டும் . நாம் நுண்ணிய மனோ நிலைக்குச சென்று, பின் மனமே இல்லா நிலைக்கு அதாவது அப்பால் இருக்கும் பொருளை இப்பால் காட்டும் தூய கண்ணாடி போன்ற மனோநிலைக்கு செல்ல வேண்டும் .

கண், காது , மூக்கு , நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலங்களில் ஒரு புலனின் செயல்பாட்டை குறைத்தால் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும் உதாரணத்திற்கு கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்க்கும் திறன் அதிகமாயிருப்பதைக்காணலாம் . தவம் செய்யும் பொழுது நாம் ஐந்து புலன்களின் சலனங்களை குறைத்து நுண்ணிய மனோநிலைக்கு செல்கிறோம். பின் மனமற்ற நிலைக்கு செல்லுகிறோம். (இதை வேதங்களில் மனோநாசம் என்றும் சொல்லுவார்கள்.) அப்பொழுது உள்ளுணர்வு விழிப்படைகிறது .

அங்கு நம்மிலும் நம்மைசுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கும் மூல ஆற்றலை உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் மூலமானது அந்த ஒரே ஆற்றல் என உணர்கிறோம். நாமும் அவ்வாற்றலே என உணர்கிறோம்.

தவத்தை கண்டிப்பாக ஒரு குருவின் உதவியுடனே கற்க வேண்டும். அவ்வாறன்றி தன்னிச்சையாகவோ நூல்களில் படித்தோ செய்யக்கூடாது . காரணம் நீங்கள் எதையாவது தவறாக செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஒருசிலர் தவறாக செய்துவிட்டு, யோகம் தவம் செய்ததால் எனக்கு இவ்வாறு ஆகிவிட்டது என்று பலரிடம் சொல்லி யோகம் தவத்தின் உன்னதம் மக்களிடம் பரவுவதில் ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறார்கள். இவ்வாறு சிலர் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலை ஏற்படுவதாலேயே குருவின்றி கற்றுக்கொள்ள கூடாது என்கின்றனர்.

9 comments:

கிளியனூர் இஸ்மத் said...

தவத்தைப் பற்றி மிகத்தெளிவாக விளக்கி உள்ளீர்கள்....நன்றி

தேவன் said...

நல்லாப் பதிவு ஐயா உங்கள் உரைகள் தொடர்ந்து வரட்டும் நன்றி!

கலகலப்ரியா said...

வழக்கம் போல் நன்று..!

அன்புடன் நான் said...

தவம் பற்றி மிக தெளிவான கட்டுரை... வாழ்த்துக்கள் ஐயா.

ஹேமா said...

மணி,தொடர்ந்தும் வாசிக்கிறேன்.
அறிந்தும்கொள்கிறேன்.

V.N.Thangamani said...

அன்பிற்கினிய நட்பு
//கிளியனூர் இஸ்மத்
//கலகலப்ரியா
//சி. கருணாகரசு
//ஹேமா
ஆகியோர்களின் உக்குவிப்புக்கு நன்றிகள்.
வாழ்க வளமுடன்.

V.N.Thangamani said...

அன்பு கு. கேசவன் அவர்களின்
பின்னூட்டத்திற்கு நன்றி
வாழ்க வளமுடன்.

தமிழ்பாலா said...

தவத்தைப் பற்றிய தங்களின் பதிவுகள் நன்றாய் இருந்தது எல்லோரும் நல்ல விசயங்களை கற்றுக்கொள்ள தங்களின் முயற்சி எங்களுக்கு நீங்கள் தரும் பயிற்சி அயற்சி இன்றி அனைவரும் கற்று தேர்ச்சி பெற்று உயர்ந்திடுவோமாக!

V.N.Thangamani said...

ஒரு சிலருக்கு பிறவியிலேயே இறையற்றளுடனான
பிணைப்பு இருக்கும். அவர்களுடைய முன்னோர்களின்
உள்ளத்தூய்மை மற்றும் உயிர்த்தூய்மையின் காரணமாக
இது சித்திக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முதல் குருவாகலாம்.