மக்களோ பலகோடி
மண்ணில்தான் நடக்கின்றார்
வானிலே பறப்பதில்லை
தேவ லோகத்து
தெவிட்டாத துணை வருமோ
கற்பனையில் கோட்டை கட்டி
காத்திருந்து மணமுடிக்க
எதார்த்தம் தண்டியொரு
எதிர்பார்ப்பு இருக்குமெனில்
உண்மை நிகழ்வுகளோ
உள்ளத்தை நெருடச் செய்யும்
மோகமது முப்பதுநாள்
ஆசையது அறுபதுநாள்
அதன் பின்னே வருவதெல்லாம்
அற்புதமாய் தோன்றது
என் காலில் நான் நிற்பேன்
உன் காலில் நீ நிற்பாய்
இணைந்து கைகோர்த்து
இனிமையாய் வாழ்ந்திடுவோம்
குறைகண்டு சுட்டினாலும்
நிறைகண்டு வாழ்த்திவிட
வாழ்க்கைத் தேர் அசையாமல்
வசந்தமாய் ஓடிவரும் .
யோகம் தவம் குறித்த எனது பதிவைக் காண இங்கே சொடுக்குங்கள்
4 comments:
அருமைங்க... நல்லா சொல்லி இருக்கீங்க..
அருமையா இருக்குங்க.
மணி,வாழ்வியலை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.கொஞ்சம் யோசிக்க வைக்கிறீங்க.
/// முதல் பினூட்டத்திற்கு நன்றி பிரியா ///
/// வானம்பாடிகள் அய்யாவிற்கு நன்றி ///
///மணி,வாழ்வியலை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.கொஞ்சம் யோசிக்க வைக்கிறீங்க. ///
என் நோக்கம் இதுதான் ஹேமா, யாரோ ஒரு சிலரேனும் யோசித்து முடிவெடுத்து வாழ்க்கையில் சுபிட்சம் பெறவேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம். உங்களின் இந்த பினூட்டம் அதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறது. மிக்க நன்றி. ( இப்போது எனது அனைத்து பதிவுகளையும் மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் புரியும் )
Post a Comment