Monday, November 9, 2009

வாழ்க்கை




உழைத்துண்டு உறங்கி
உறவுகொண்டு பெற்று
வளர்த்து மணமுடித்து
வழ்க்கைஎது என்றால்

எதுவுமில்லை சும்மா -வெறும்
சுழற்சிஎனத் தோன்றும்
எதற்கிந்த சுழற்சி
யார்செயும் வேலை ?

இயற்க்கைஎனு மாற்றல்
இயல்பூக்கம் கொண்ட
பரிணாமம் என்றே
பலபேர்கள் சொல்வர் .

ஆற்றல்களம் அமுங்கி
அண்டவெளி யாச்சு
அதிலே உயிர் தோன்றி
ஆறரிவுமச்சு.

ஆறறிவின் மேலே ஓரறிவு உண்டா?
தவமிருந்து மனிதன் - அவ்
வாற்றளுணர் செயலே
பெரும்சுழற்சி மீண்டும்
பூரணமாய் ஆகும் .

பூரணத்தை உணர்ந்தோன்
பரிணாம முற்றாம்
அகுதிலார் எல்லாம்
பிழைத்தோரே யன்றி
வழ்ந்தோராய் ஆகார் .

5 comments:

vasu balaji said...

நல்லா இருக்குங்க.
/அகுதிலார் எல்லாம்
பிழைத்தோரே யன்றி
வழ்ந்தோராய் ஆகார் ./

நல்ல கருத்து

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா இருக்குங்க...! தட்டச்சுப் பிழை கொஞ்சம் பார்த்துக்குங்க..!

ஹேமா said...

வாழ்வு பற்றிய ஆழமான சிந்தனை.

//பூரணத்தை உணர்ந்தோன்
பரிணாம முற்றாம்
அகுதிலார் எல்லாம்
பிழைத்தோரே யன்றி
வழ்ந்தோராய் ஆகார்.//

Pavi said...

அருமை .................

swtawetkreikrtrnwert said...

my best wishes fir your grat effort.-k.mohan,spcollege,638315