Sunday, November 8, 2009

புத்தகம்




நல்லதை எடுத்துக்கொண்டு
அல்லாததை விட்டுவிட
சுத்தமாய் சுதந்திரத்தை
என்னிடத்தே விடுகின்றாய்

வற்புறுத்தித் திணிக்காமல்
வேண்டுவற்கே விசயம்சொல்வாய் .
எதுவேண்டுமோ எடுத்துக்கொள்ளென்று
ஏகாந்தமாகவே இருக்கின்றாய் .

எப்போது வேண்டுமோ பார்த்துக்கொள்ளென்று
யுகாந்திரமாய் காத்திருப்பாய்.
வாழ்ந்தவனும் வீழ்ந்தவனும்
உன்னுள்ளே தானடக்கம் .

வாழவழி தேடுவற்கும்
வழிஉன்னுள் தானிருக்கும் .
உலகத்து அறிவெல்லாம்
உன்னுள்ளே தவமிருக்கும் .

சமுதாய புரட்சியை நீ
சப்தமின்றி யேசமைப்பாய்.
உன்சொல் கேட்பவற்கே
உயர்வுண்டு வாழ்க்கையிலே .

உண்மையாய் அணுகுவோரை
உத்தமனாய் ஆக்கிடுவாய் .
சகவாசம் கொண்டவரை
சான்றோனாய் ஆக்கிடுவாய்

10 comments:

கலகலப்ரியா said...

நல்ல புத்தகம்..! அங்க ஒண்ணும் இங்க ஒண்ணுமா கொஞ்சம் தட்டச்சுப் பிழை இருக்கே... பாருங்க..!

vasu balaji said...

/எடுத்துக்கொல்லென்று /

பிழை பாருங்க சார். கவிதை நல்லாருக்கு.

V.N.Thangamani said...

பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்.
பின்னுட்டத்திற்கும் நன்றிகள்.
திருத்தியிருக்கிறேன்.
நன்றி பிரியா ,
நன்றி வானம்பாடிகள் அய்யா

ஈரோடு கதிர் said...

கருத்துள்ள கவிதை

வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

புத்தகம் புர‌ட்டினேன்...வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

புத்தகம் ஒரு நல்ல நண்பன். அந்த நண்பனுக்கு இந்த நண்பர் கவிதை எழுதி இருப்பதில் மகிழ்ச்சி. அருமை.

வாழ்த்துக்கள்.

http://thisaikaati.blogspot.com

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றாக இருக்கிறது கவிதை. தொடருங்கள்.

ஹேமா said...

பொத்தகம்ன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க.அத்தனையையும் எங்கள் அகங்களுக்குள் செலுத்துவதென்றால் !

Pavi said...

உண்மையாய் அணுகுவோரை
உத்தமனாய் ஆக்கிடுவாய் .
சகவாசம் கொண்டவரை
சான்றோனாய் ஆக்கிடுவாய்

Pavi said...

நல்லா அருமையான வரிகள் .