
பூமியை புரட்டி போடும்
பூவையர் கூட்டம் இவர்கள்
மனித குலத்தின் பசிக்கு
மருந்து தேடும் மாதர்
இவர்க்கு யாரும் உண்டோ
இசைந்த பட்டம் கொடுக்க .
இடையும் தொடையும் காட்டி
அட்டை படத்தில் நிற்பர்
அரசும் புரசும் சேர்ந்து
பட்டம் சிலவும் கொடுப்பார் .
உழைக்கும் மனிதர் தம்மை
உலகோர் மதிததுண்டா
-இவன் வி. என்.தங்கமணி
3 comments:
நல்ல கவிதை
தொடருங்கள்
மலையக மக்களைப்பற்றிச் சிந்திப்பவர்கள் சிலரே.நல்ல கவிதை.
கருத்துக்கு நன்றி கதிர், ஹேமா ... ..... வாழ்க வளமுடன்.
Post a Comment