Wednesday, October 21, 2009

நாம் எங்கே போகிறோம்


இந்த குழந்தை கண்டு

இதயத்தில் ரத்தம் வடிகிறது

தாயில்லை தந்தையில்லை

தனக்குற்றோர் யாருமில்லை ...

அநாதை சிறுவனிடம்

அடைக்கலமாய் ஒரு குழந்தை !

விதியின் கதை தன்னை

விலா எலும்பு சொல்கிறது ...

மனித குலத்தின்

மகத்தான பொக்கிசங்கள் !

தெருவோர காடுகளில்

திக்கின்றி கிடப்பதுவோ

மனித குல வளர்ச்சிக்கு

மகத்தான உதாரணம் !

நேயத்தை கொன்றுவிட்டு

நீசராய் வாழுவதோ !

இதயமில்லா மனிதர்களை

இறைவன் படைத்தானோ ?


-இவன் வி.என்.தங்கமணி

உங்கள் கருத்தை தமிழில் தெரிவிக்க கீழ் உள்ள தளத்திற்கு சென்று டைப் செய்து
http://www.google.co.in/transliterate/indic/Tamil காப்பி செய்து கமன்ட்க்கான பகுதியில் பேஸ்ட் செய்யவும்

3 comments:

ஹேமா said...

மனிதம் செத்து ரொம்ப நாளாச்சு தங்கமணி.

V.N.Thangamani said...

கருத்துக்கு நன்றி ஹேமா ... வாழ்க வளமுடன்.

கலகலப்ரியா said...

அபாரம்.. :)