Sunday, January 3, 2010

நல் மார்க்கமுள்ள திருநாடு


காந்தியும் வள்ளுவனும் கருணைமிகு புத்தனும்

வாடிய பயிர்கண்டு வாடிய வள்ளலாரும்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்ற

முறுக்குமீசை வீரன் முண்டாசு பாரதியும்



ஆறெல்லாம் கடல்நோக்கி மதமெல்லாம் இறைநோக்கி

எம்மதமும் தாழ்வில்லை எல்லாமே சமமென்ற

வீர முழக்கமிட்ட விவேகானந்தரெனும்

மகான் பிறந்த நல் மார்கமுள்ள திருநாடு



தவத்திலும் யோகத்திலும் தளர்விலா உயர்வோடு

குருகுல கல்வியிலே நிகரிலா உயர்வு கொண்டோம்

ஆங்கில கல்வி வந்தே அதிலே ஓர் தாழ்மைகொண்டோம்

எல்லாவில் துறை கண்டோம் வாழ்வியலை தொலைத்துவிட்டோம்



ஐம்பதாண்டு சுதந்திரத்தில் அயராது உழைத்தாலும்

வருமைஎனும் குறைதன்னை நிறையாக்க முடியவில்லை

வானம் பொய்த்திடுமோ வரும் பூச்சி கொன்றிடுமோ - என்று

அரை வயிறை நிரப்பிவிட்டு அதில் பாதி சேமித்தோம்



சேமிக்கும் பழக்கத்தால் பெரும்புயலில் தப்பித்தோம்

வளமிருந்தும் கடன் வாங்கும் பழக்கத்தால் மேற்கத்தார்

பெரும்புயலில் பொருளிழந்து பகட்டுடைந்து நிற்கின்றார்

தர்மம் தலையை கொஞ்சம் காக்கத்தான் செய்கிறது



ஓருலக கூட்டாட்சி சமைத்திடவே வேண்டுமென்று

இராணுவத்து வீண்செலவை சுபிச்சதிற்கு செலவிடவே

யோகம் தவத்தோடு நல்லெண்ண பழக்கங்களை

விதைக்கவந்த நல்லமகான் வேதாத்திரி வாழ்க வாழ்க.


நண்பர் குகன் அவர்களின் நகரத்னா பதிப்பகம்

வெளியிட்ட " காந்தி வாழ்ந்த தேசம் "
கவிதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற
எனது கவிதை.

7 comments:

தங்க முகுந்தன் said...

அருமை! வாழ்த்துக்கள்!!
இன்றும் காந்தியை நினைவு கொள்வோரை நான் உளமார நேசிக்கிறேன்! இந்த நூல் எங்கே கிடைக்கும்?

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் ஐயா....

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

//ஆங்கில கல்வி வந்தே அதிலே ஓர் தாழ்மைகொண்டோம் //

ஹிந்திய விட்டுடிங்க!, அதை படிக்கலைனா இந்தியாவிலேயே வாழ முடியாதுன்னு ஒருத்தர் போன மாசம் சொன்னாரே!

ஹேமா said...

நல்ல கருத்தும் கவிதையும் மணி.பெரியவர்கள் நினைவு கொள்வதால்தான் நாங்கள் இன்னும் மனிதம் கொண்ட மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தோழரே.மணி,பொங்கல் அனுப்பிவிடுங்க கொஞ்சம்...!

V.N.Thangamani said...

/// இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தோழரே.
மணி,பொங்கல் அனுப்பிவிடுங்க கொஞ்சம்...! ////
அன்பு ஹேமா வாழ்த்துக்கள்....
பொங்கல் தானே உங்களுக்கு இல்லாமலா !
ஆ .... சொல்லுங்க .வாயிலே போட்ட்டுட்டா போச்சு .
வாழ்க வளமுடன்

V.N.Thangamani said...

//// தங்கமுகுந்தன்
ஆரூர்
வால் பையன்
கமலேஷ் ////
அனைவருக்கும் நன்றி
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.