Tuesday, December 22, 2009

பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்


ஈரோடு வலைப்பதிவர் கூட்டம் இனிதே நடந்தேறியது. அனைவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர். சுமார் 70 பேர் கலந்து கொண்டு பெரியார் பிறந்த மண்ணுக்கு பெறுமை சேர்த்தனர். கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக பேசினர்.


திருவாளர்கள் புலவர் இராசு,தமிழ்மணம் காசி,ஆரூரான், பழமை பேசி, செந்தில் பக்கங்கள் ஆகியோரின் பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது.

மிகச்சிறப்பாக இந்த விழா நடைபெற்றதற்கு காரணம். கதிர் மற்றும் ஈரோடு வாழ் நண்பர்களின் அயராத உழைப்பே காரணம்.


விழாவிலே பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்
குறித்து நான் பேசியது.   உங்களுக்காக இங்கே ...சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதன் நன்நெறியில் செல்வதற்கும், அதிலிருந்து விலகுவதற்கும் இரண்டு காரணிகள் உண்டு. ஒன்று மரபு மற்றொன்று சூழ்நிலை


1. மரபு என்பது பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் பண்பும் குணநலன்களும் கரு மூலமாக ஒரு மனிதனுக்கு வருவது. இது பிறக்கும் போதே முடிவாகி விடுவதால் இதில் நாம் எந்த மாற்றத்தையும் செய்வதற்கில்லை.


2. சூழ்நிலை என்பது பெற்றோரின் வளர்ப்பு முறை, ஆசிரியரின் வழிகாட்டுதல், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் இந்த வரிசையில் இப்பொழுது வலைதளம் என்பதும் வருகிறது.


ஒரு தனிமனிதனுக்கும் அதன் மூலம் ஒரு சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிடும் மகத்தான சக்தி வாய்ந்த கருவி நம் கையில் இருக்கிறது. வெளியிட்ட ஒரு சில வினாடிகளில் உலகின் எந்த மூலைக்கும் செல்லும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வலைதளம்.


இதில் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கலாம். ஆனால் பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டுமே இதை பயன்படுத்துவதை தவிர்த்து. ஆக்கபூர்வமான சிந்தனையையும் படைப்போம். சமூக அவலங்களை சுட்டிக்காட்டுவதும் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் விசயங்களை இனங்கண்டு பாராட்டுவதும் நமது கடமையாகும். ஆரூரான் ஐயா வலிவுள்ளதே எஞ்சும் என்று சொன்னது போல், வலிவுள்ள பதிவுகளே காலத்தால் அழியாமல் நிற்கும்.

படைப்புத்திறன் உள்ள பல பேர்கள் வலைதளம் ஆரம்பிக்க தெரியாமல் இருக்கின்றனர். பல்வேறு சமூக விழாக்களில் கலந்து கொள்பவர்கள், இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தலாம்.


ஈரோடு வலைப்பதிவர் கூட்டம் குறித்த முழுமையான விபரத்திற்கு இங்கே சொடுக்குங்கள்.

பழமை பேசி பக்கம்  , ஈரோடு கதிர் பக்கம்


விழா குறித்த படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

12 comments:

Sanjai Gandhi said...

சார் வணக்கம். நான் தான் உங்க கிட்ட பேசின சஞ்சய்காந்தி. தமிழ்மணம் காசி அண்ணா அறிமுகப் படுத்தினாரே. என் மெயில் ஐடி sanjaigandhi@msn.com. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வணக்கம் ஐயா, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நல்ல கருத்துகளைக் கூறினீர்கள். விரிவாக விவாதிக்க நேரமில்லாமல் போய் விட்டது. என் பெயர் செந்தில்வேலன். நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஈரோடு கதிர் said...

பகிர்வுக்கு நன்றிங்கண்ணா

வால்பையன் said...

பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!

vasu balaji said...

நல்ல கருத்துகள் தங்கமணி.

cheena (சீனா) said...

அன்பின் தங்கமணி
அருமையான இடுகை - அரிய கருத்துகள்

நல்வாழ்த்துகள்

கலகலப்ரியா said...

நல்ல விஷயம்.. சுருக்கமாகத் தொகுத்துள்ளீர்கள்...!

V.N.Thangamani said...

வாங்க வாங்க அனைவருக்கும் வந்தனம்.

//SanjaiGandhi
//ச.செந்தில்வேலன்
//ஈரோடு கதிர்
//வால்பையன்
//வானம்பாடிகள்
//cheena (சீனா)
//கலகலப்ரியா
உங்கள் பின்னூடத்திற்கு நன்றி.

சீனா அண்ணா மன்னியுங்கள்
உங்கள் துணைவியாரின்
கவிதையை வாசித்தீர்களே
மிகவும் அருமை.
அதை உங்கள் பதிவில்
இடுங்கள் எல்லா நண்பர்களும்
படித்து இன்புறட்டும் . நன்றி
வாழ்க வளமுடன்.

முனைவர் இரா.குணசீலன் said...

கூட்டத்துக்கு வந்தும் தங்களுடன் உரையாட இயலவில்லை..
அடுத்து கூட்டத்தில் தவறாது உரையாடலாம் நண்பரே....

ஆரூரன் விசுவநாதன் said...

சமூகத்தில் நம் பங்கைப் பற்றி மிக அழகாகச் சுட்டிக் காட்டினீர்கள். உங்களைப் போன்றோரின் வழிகாட்டலும், அன்பும் எங்களைப் போன்றோரை வழி நடத்தும் என்பதில் ஐயமில்லை.

அன்பிற்கு நன்றி ஐயா

V.N.Thangamani said...

அன்பு குணா,
மதிப்பிற்குரிய ஆரூர் அய்யா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எல்லா உயிகளும் இன்புற்று வாழ
நம்மால் இயன்றதை நாமும் செய்வோம்.
நன்றி அய்யா, வாழ்க வளமுடன்.

மனோவியம் said...

வணக்கம் ஐயா. நல்ல கருத்துக்களை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி தரமான கருத்துக்களுடன் நலமான வாழ்வை சமைப்போம் ஐயா....வாழ்க வளமுடன்.