நூறு கோடி இந்தியர்களின் கனவு, கங்கை காவிரி இணைப்பு. வேண்டாம் கங்கையை காவிரியோடு இணைக்க வேண்டாம். மகா நதியிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரையாவது காவிரி,வைகை, தாமிர பரணியோடு இணைக்கலாமே. பல லட்சம் இந்தியர்கள் இன்னும் ஒரு வேளைச் சோறு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்னைக்கு முதலில் தீர்வு காணாமல் நிலவிலே தண்ணீர் இருப்பதைக் கண்டுதான் என்ன? தங்கம் இருப்பதைக் கண்டுதான் என்ன? நம் வீட்டுக் குழந்தைகளைப் பட்டினி போட்டு விட்டு உலக சாதனை செய்வதால் என்ன பயன்? அடுத்த மாநிலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை இந்த மாநிலத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்த நாதியில்லை. நிலவிலிருக்கும் தண்ணீரைக் கொண்டு வந்த எந்த நாட்டு பஞ்சம் தீர்க்கப் போகிறார்கள்.
இது குறித்து அருட்செல்வர் ஐயா அவர்கள் பல நாட்களாக பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். இந்த மாதம் கூட
ஓம் சக்தி டிசம்பர்-2009 இதழில் இது குறித்து விளக்கமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த மாமனிதருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
கங்கை காவிரி இணைப்பு குறித்து 1987ல் ஒரு கவிதை எழுதி, தபால் அட்டையில் அச்சிட்டு நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். அதை முன்பொரு பதிவில் இட்டிருந்தாலும், இங்கே மீண்டும் இடுவது பொருத்தமாக இருக்குமென்று பதிவிட்டிருக்கிறேன்.
கங்கை காவிரியாள்
இன்றில்லை என்றாலும்
இரு நூறு ஆண்டாயின் ....
கடலில் வீணாக
கடந்தேகும் கங்கைதனை
காவிரி பெண்ணோடு
கை கோர்க்க செயல் வேண்டும்.
எனவே எழுதுங்கள் ...
எப்போதும் பேசுங்கள் ...
உங்கள் பேச்சே
உங்கள் எழுத்தே
விதையாகி வித்தாகி
விரைந்து செயலாகட்டும்
விளைந்து வளம் பெருகட்டும்.
இன்றில்லை என்றாலும்
இரு நூறு ஆண்டாயின் . . .
11 comments:
மணி ஆழமாகப் பதிந்திருக்கும் உங்கள் எண்ணங்களும் முயற்சியும் என்றும் வெற்றியே தரும்.
காலத்தோடு காத்திருக்கப் பொறுமைதான் வேணும்.
நன்று.நன்றி.வாழ்க வளமுடன்.
// நன்றி ஹேமா, 20-12-2009 அன்று ஈரோட்டில் பதிவர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
அது குறித்து எனது முந்தைய பதிவில் அல்லது ஈரோடு கதிர் பக்கத்தில் பாருங்கள்.
வாழ்க வளமுடன். //
// நன்றி தங்கமணி ஈரோடில் சாந்திபோம். வாழ்க வளமுடன். ///
நாம் தொடர்ந்து இது குறித்து பேசுவோம். எழுதுவோம். என்றாவது ஒரு நாள் இது நிறைவேறும்.
நம் அரசியல் வியாதிகள் முழு மனதுடன் இதன் சாத்தியங்கள் பற்றி ஆராயவேண்டும்.
எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.
நன்றி ரோஷ்விக், கருணாகரசு
தட்டிக்கொண்டே இருப்போம்.
என்றாவது ஒரு நாள் திறக்கும்.
வாழ்க வளமுடன்.
நல்லெண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்..
உங்கள் எண்ணம் மிகவும் சிறந்தது..ஈடேற வாழ்த்துக்கள்..
வருகைக்கும் வாழ்த்துக்கும்
//நன்றி மல்லிகா
//நன்றி பூங்குன்றன்
வாழ்க வளமுடன்.
நாளை உங்களை சந்திப்பதற்கு ஆவலாய் இருக்கிறேன் ஐயா..!
மணி ஒன்றுகூடல் சிறப்புற அமைய என் வாழ்த்துக்கள்.அது பற்றிய பதிவுகளைப் பின்னர் தருவீர்கள்தானே ?
Post a Comment