நாம் அனைவருமே கடந்த காலத்தில் நடந்தவைகளையும் எதிர் காலத்தில்
செய்ய வேண்டியதையுமே என்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நிகழ்காலம் என்ற அந்தக் கணத்தை நினைந்திருப்பது இல்லை. அதிலும்
இறந்த கலத்தில் நடந்த துன்ப நிகழ்வுகளையே நினைந்து துன்புறுவது
அதிகம். வாழ்வில் துன்ப நிகழ்வுகள் எப்போதேனும் நடப்பதை எப்பொழுதும்
நினைந்து துன்புற்று உயிராற்றலை செலவழிக்கிறோம். அதேபோல் எதிர்
காலத்தில் செய்ய வேண்டியதை எப்பொழுதும் நினைந்து துன்புறுவதும்
நடக்கிறது.
ஒரு செயலைச் செய்யும் போது முழு மனதையும் அச்செயலில் செலுத்தாமல்
இறந்த கால எதிர் கால நினைவுகளில் மனம் செல்வதால் அக்காரியம்
முழுமையுடையதாக இருப்பதில்லை.
இதையே கீதையில் பலனை எதிர்பாராது செயலில் கவனத்தை செலுத்து
என்கிறது. நாளைய தேர்வை நினைந்து கவலை கொள்ளாமல் இன்று
நன்றாகப் படி. நன்றாக தேர்வெழுது. தேர்வு முடிவு நன்றாக இருக்கும்
என்கிறது. அதே போல் என்றோ ஒருவர் நமக்கு செய்த தீங்கை எப்பொழுதும்
நினைந்து வெறுப்பை மனதில் வளர்த்துக் கொண்டிருப்போம். ஒரு வேளை
அவர்கூட மனம் திருந்தி நல்லவராகி இருக்கக்கூடும். அவரைப் பற்றி நமது
மனதில் கலங்கமாகவே நினைத்துக் கொண்டிருப்போம். பல நல்ல நண்பர்கள்
நமக்கு இருந்தாலும் ஒரு சில எதிர் கருத்துக் கொண்டோரையே அதிகமாக
நினைத்துக் கொண்டிருப்போம். இதனால் உங்கள் ஆழ்மனதில் எதிரிகளைப்
பற்றிய நினைவே அதிகமாகத் தேங்குகிறது.இவ்வாறான எதிரிகளை மறக்கவும்
நண்பர்களை அதிகமாக நினைந்து வழ்த்தவும் தவப்பயிற்சி அதிகம் உதவுகிறது.
நிகழ்காலத்தில் நிற்கும் பழக்கமும் வருகிறது. அப்புறமென்ன தவம் செய்தால்
கவலை காணாமல் போகிறது. சந்தோசம் தானாக வருகிறது.
கவிதை எழுதியபோது பின்னூட்டமிட்டவர்களெல்லாம். தவம் பற்றி
எழுத ஆரம்பித்ததும் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்கள்.
அந்த இனிய நண்பர்களுக்காகவும் நாலு கவிதை எழுதத்தான் வேணும்.
4 comments:
FONT சரியா டிஸ்ப்பிளே ஆகலை...
வேறு font ல் அடித்து போஸ்ட் பண்ணுகிறேன். நன்றி கலையரசன்.
வாழ்க வளமுடன்.
ஐயா. தமிழ் font தெரியவில்லை..
கொஞ்சம் சரிசெய்யுங்கள்..மீண்டும் வருகிறேன்..
http://niroodai.blogspot.com
//ஒரு செயலைச் செய்யும் போது முழு மனதையும் அச்செயலில் செலுத்தாமல்
இறந்த கால எதிர் கால நினைவுகளில் மனம் செல்வதால் அக்காரியம்
முழுமையுடையதாக இருப்பதில்லை. //
இது என் பலஹீனம்.
Post a Comment