Sunday, November 29, 2009

சுழற்சி



சுக்கிலமும் சுரோணிதமும் -ஒரு
புள்ளியில் தான் சந்தித்தன.
பிறக்கையிலே இரண்டுகிலோ
பின்னெப்படி பெரிதானோம்.

மண்ணிலே விளையாத
மற்றேதும் உண்டதில்லை
மண்ணீரும் காற்றுவெப்பம்
விண்சேர்ந்து உண்டான

பொருளேதான் நாமுண்டு
பெரிதாக வளர்ந்து நிற்போம்.
பஞ்சபூத மல்லாது
வேறொன்றும் நாமல்ல .

இரத்தமும் சதயாக்கி
கொழுப்பாக்கி எழும்பாக்கி
மச்சையாக்கி மூலயாக்கி
சுக்கிலமும் சுரோணிதமும்

மற்றுமொரு பிறப்பாக்கும்
வேலையை செய்வது யார்.
பேராற்றல் ஒன்றுண்டு - அது
எங்கும் நிறைந்துண்டு.

மனிதஉடல் மரித்தபின்னே
மறுபடியும் மண்ணாகும்.
சுழற்சிதான் எல்லாவும்
அணுமுதல் அண்டம்வரை.

2 comments:

ஹேமா said...

ஒன்றின் முடிவு இன்னொன்றின் ஆரம்பம் என்பதன் சுழற்சி இதுதானோ ¨
அன்பு மணி,வீடு திரும்பவும் வெறுமை.மனதிலும் கூட.அதுதான் பதிவு போடவில்லை.
குழந்தைநிலாவுக்கும் சின்ன விடுமுறை.மாவீரர்தினத்தின் அழுத்தம் இன்னும் மனதில்.

V.N.Thangamani said...

அன்பு ஹேமா நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.
வாழ்க வளமுடன்.