
உணவின்றி ஒருகூட்டம் வாடுவதும் - அவர்
இரத்தத்தை உறிஞ்சி சிலர் வாழுவதும்
என்னேநம் மானிடத்தின் ஜீவிதங்கள்
மனமிறங்கா கல்நெஞ்சக் காவியங்கள்
இயற்கைவளம் நிறைந்திருக்கும் நாடுஅது
இளைத்திருப்போர் வாழ்ந்திருக்கும் காடுஅது
கொழுத்திருக்கும் கூட்டத்தார் அங்குசென்றே
இளைத்தாரை கசக்கிநல்ல பொருள்கொனர்வார்
பழங்குடிகள் வாழுகின்ற நாட்டினிலே - சிலர்
காப்பானைப் போலநல்ல வேடமிட்டே
களவாடும் கூட்டத்தார் கண்டீரோ - பலர்
உணவின்றி உயிர்துறத்தல் கேட்டீரோ
அறிவியலில் உயர்ந்தமென மார்தட்டி
அக்கம்பக்கம் சாவவர்மேல் நடந்துசெல்லும்
இழிநிலையை மனிதமென கொள்ளுவதோ !
இரங்கியொரு துணைசெய்ய வேண்டாமோ ?
5 comments:
கவிதை மிகவும் நல்லாயிருக்குங்க...
/உணவின்றி ஒருகூட்டம் வாடுவதும் - அவர்
இரத்தத்தை உறிஞ்சி சிலர் வாழுவதும்
என்னேநம் மானிடத்தின் ஜீவிதங்கள்
மனமிறங்கா கல்நெஞ்சக் காவியங்கள் /
ஆஹா.
/இழிநிலையை மனிதமென கொள்ளுவதோ !
இரங்கியொரு துணைசெய்ய வேண்டாமோ ? /
உணர்ந்தா உலகம் சொர்க்க பூமி
பாராட்டுக்கள் தங்கமணி
word verification வேண்டாமே. பின்னூட்டமிடத் தடையாயிருக்கும். மேலும் அதனால் பயன் ஒன்றுமில்லை. இது என் கருத்து.
//அறிவியலில் உயர்ந்தமென மார்தட்டி
அக்கம்பக்கம் சாவவர்மேல் நடந்துசெல்லும்
இழிநிலையை மனிதமென கொள்ளுவதோ !//
மனிதனும் மனித நேயமும் இல்லாமல் மறைந்து வரும் நேரத்தில் மனிதம் கதைப்பது சரியோ மணி !பக்கதில் அமெரிக்கா பணத்தை வச்சுக்கொண்டு என்னென்ன அட்டகாசம் பண்ணுது.
அன்பு கருணாகரசு அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.
அன்பு வானம்பாடி அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்கள் கருத்துக்கு நன்றி.
word verification ஐ எடுத்துவிடுகிறேன் நன்றி அய்யா.
///மனிதனும் மனித நேயமும் இல்லாமல் மறைந்து வரும் நேரத்தில் மனிதம் கதைப்பது சரியோ மணி !பக்கதில் அமெரிக்கா பணத்தை வச்சுக்கொண்டு என்னென்ன அட்டகாசம் பண்ணுது.//
கருத்துக்கு நன்றி ஹேமா. அந்த அட்டகாசத்துக்கு விளைவுகள் உண்டாகிட்டே இருக்கு. தவிரவும் நல்லெண்ணங்களை பரப்பும் பணியை நாம் செய்துகொண்டே இருப்போம். ஒரு கோடி அன்டாயினும் ஒருநாள் இந்த பூமி சொர்கபூமியாகித்தான் தீரும். அதற்கு நம் பணி ஒரு சிறிய விதையாகட்டும்.
அன்பு பிரபாகர், ராமசாமி அய்யா, ஈ ரா ஆகியோர்களுக்கு நன்றிகள் .
அனைவரும் வாழ்க வளமுடன். கருத்துக்கு நன்றிகள் .
Post a Comment