இன்றில்லை என்றாலும் இரு நூறு ஆண்டாயின் ....
கடலில் வீணாக
கடந்தேகும் கங்கைதனை
காவிரி பெண்ணோடு
கை கோர்க்க செயல் வேண்டும்.
எனவே எழுதுங்கள் ...
எப்போதும் பேசுங்கள் ...
உங்கள் பேச்சே
உங்கள் எழுத்தே
விதையாகி வித்தாகி
விரைந்து செயலாகட்டும்
விளைந்து வளம் பெருகட்டும்.
இன்றில்லை என்றாலும்
இரு நூறு ஆண்டாயின் . . .