Sunday, September 18, 2011

முதுகு வலிக்குத் தீர்வு


இன்று பலரை துண்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய் (Back Pain) என்று சொல்லப்படும் முதுகுவலி. இந்த வலிக்கான காரணமாகக் கூறப்படும் எலும்பு தேய்மானம் ஜவ்வு தேய்மானம் என்பது பெரும்பாலும் உண்மையான காரணமல்ல. பெரும்பாலான முதுகுவலிக்கு காரணம் வாயு (Gas) ஆகும். உங்களுக்கு வலி ஒரே இடத்தில் அல்லாமல் ஒரு சில நாட்களில் சற்று இடம் மாறி வலித்தால் அதற்கு காரணம் வாயுவேதான்.

அதிகமாக உண்பதால் ஜிரணித்தது போக மீதமுள்ள உணவு குடலில் புளித்துப் போய் ஒருவித வாயு உண்டாகிறது. இந்த வாயு ஏப்பமாக, கொட்டாவியாக, அபானவாயுவாக வெளியேறாவிட்டால் உயிராற்றல் பரவக்கூடிய நாடிகளில் நுழைந்து ஆற்றல் பரவுவதில் ஒரு தடை ஏற்படுகிறது. அந்த தடையே வலியாக உணரப்படுகிறது. இந்த வாயு நாடிகளில் நகர்ந்து இடம் மாறும் வாய்ப்பு உள்ளதால் வலியும் இடம் மாறுகிறது.

இந்த வலியை தவிர்க்க ஐந்து விக்ஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1. உணவு
இன்னும் இரண்டு கை சாப்பிட்டால் போதும் என்கிற போதே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பாட்டை வாயில் போட்டதும் வெளிக்காற்று வாயில் புகாதவாறு உதடுகளை மூடிக்கொண்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். உண்ணும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.

2. படுக்கை
பஞ்சு போன்ற மெத்தைகளைத் தவிர்க்கவும். கயிற்றுக் கட்டிலானால் கயிறு தொங்கலாக இருப்பதைத் தவிர்க்கவும். தரையில் பாய் விரித்து தலையணை வைத்துப்படுப்பது நலம். நாம் புரண்டு படுக்கும் போது வயிற்றுக்கு ஓரளவு அழுத்தம் கிடைக்க வேண்டும். அதனால் வாயு ஏப்பமாக அபான வாயுவாக வெளியேறிவிடும்.

3. எண்ணெய் குளியல்
வருடத்திற்கு நான்கு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இதனால் முட்டு எலும்புகளில் உள்ள ஜவ்வுகளுக்கு போதுமான அளவு உராய்வுத் தன்மையைத் தாங்கக்கூடிய வளவளப்புத் தன்மை கிடைக்கும். ஜவ்வு தேய்வதில்லை, வரட்சித் தன்மையாலேயே வலி உண்டாகிறது.

4. உடற்பயிற்சி
வேதாதத்ரிய யோகத்தில் படுத்துக் கொண்டு செய்யக்கூடிய மகராசனப் பயிற்சியும் சூரிய நமஸ்காரப் பயிற்சியும் செய்தால் முதுகுவலி மூட்டு வலி நீங்கும்.

5. உட்க்காரும் பொழுது எப்பொழுதும் நிமிர்ந்து உட்க்கார வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் மாலை 3 மணி முதல் ஐந்து மணிக்குள் ஒரு இருபது நிமிடம் முதுகில் வெயில் படுமாறு நிற்பது நலம். தினமும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

  உடலிலிருந்து பலகோடி செல்கள் உதிர்வது போலவே பல கோடி செல்கள் உற்பத்தியும் ஆகிறது. எனவே எழும்பு, ஜவ்வு தேய்மானம் என்பது இல்லை. அவ்வாறாயின் ஜல்லி உடைக்கும் தொழிலில் உள்ளவர்களின் கைகள் பொழுதெல்லாம் இயங்குவதால் தனித்தனியாகக் கழன்று விடும். ஸ்கேன் செய்து பார்த்து முதுகில் சதைக்கட்டி அல்லது நீர்க்கட்டி இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யலாம். இல்லையென்றால் மேலே சொன்ன ஐந்தையும் கடைபிடித்து நோய் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

வாழ்க வளமுடன்.     
.

16 comments:

Thangamani said...

ஒவ்வொருவரும் அறிந்து கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள். மிக்க நன்றி.

V.N.Thangamani said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கமணி.
வாழ்க வளமுடன்.

மாலதி said...

ஒரு சிறந்த ஆக்காம் பாராட்டுகள் அனாலும் இவற்றிலும் விட முதுகு வலிக்கான காரணங்கள் உண்டு என அறியப்படுகிறது ....கடைசி தண்டுவடத்தில் உள்ள வாசர் போன்ற வட்ட வில்லை சற்று விலகி நோவை உண்டாக்குகிறது என மருத்துவ வல்லுனர்கள் அறிவிக்கிறார்கள் பிழை எனின் கூறுக....

V.N.Thangamani said...

கருத்துக்கு நன்றி மாலதி.
நீங்கள் சொல்லுவது சரிதான்
என்றாலும் உடலில் எந்த
ஒரு பொருள் சிறிது விலகினாலும்
அது தன் இயல்பான நிலைக்கே
திரும்பி செல்ல முயற்சிக்கும்
அதற்கான தடை வளவளப்பு தன்மை
இல்லாமையாலே பெரும்பாலும் உண்டாகிறது.
பதிலில் திருப்தி இல்லை என்றால்
எழுதுங்கள் விளக்கமாக பேசுவோம்.
நன்றி மாலதி. வாழ்க வளமுடன்.

raji said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்


http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்கள்...

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

V.N.Thangamani said...

எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய
ராஜி க்கு நன்றி.
கருத்து தெரிவித்த எஸ். குமார் மற்றும்
ராஜா ராஜேஸ்வரிக்கும நன்றிகள்
வாழ்க வளமுடன்.
அன்போடு வி.என்.தங்கமணி

ஹேமா said...

என்ன இப்பிடிக் கேக்கிறீங்க!உங்களை மறப்பேனா.நான் நல்ல சுகம்.நீங்களும்தானே !

பதிவு பற்றிச் சொன்னால் சாப்பாடு பற்றிச் சொன்னதை மட்டுமே செயல்படுத்த முடியுமென நினைக்கிறேன்.ஆனாலும் நல்ல தகவல்கள்.முயற்சிக்கலாம் சுகமாய் வாழ !

Dadha_Music said...
This comment has been removed by the author.
Dadha Kumar said...

[Excuse me for typing in English as I don't know typing in Tamil]

Hi Mr.Mani,


You're absolutely correct. I have been suffering from this pain since 2008. I worked for a company in night shifts for a year at that time.

I didn't eat properly. That brought this pain into me. I was prescribed by so many Doctors and even took MRI scan. But nothing was diagnosed out of it except wasted money on it.

They didn't explain about why I have been suffering from this pain, probably they would have not known about this (Valuable Doctors please excuse me) and prescribed me some pills, ointments, tonics etc.,

As years have passed by, I started living with this pain by avoid worrying even thinking about this. Fortunately, Three months ago I had to meet an ayurvedic doctor in Pondicherry and he had told me about this Gas issue and informed what I experienced in past three years. I really wondered and finally found the reason for that.

I have been taking his prescriptions since then. Let's see, would it get cure or not !!

By the way this article has given me good suggestions. But unable to say right now that what I could follow from it. :-)

I don't even know how to do that Aasanam mentioned in this article.

Thanks Mr. Mani.

V.N.Thangamani said...

கருத்து தெரிவித்த ஹேமா மற்றும்
Dadha Kumarக்கும நன்றிகள்
வாழ்க வளமுடன்.
அன்போடு வி.என்.தங்கமணி

Unknown said...

நல்ல பதிவு ...இதில் என்னை குளியல் வருடத்திற்கு இல்லை மாதத்திற்கு இரண்டு முறை கட்டாயம் எடுக்க வேண்டும் ...இது நான் சந்தித்த சித்த மருத்துவர் சொன்னது

Unknown said...

இதில் பைக் ஓட்டுபவர்களின் நிலைமை சொல்லி மாளாது....வண்டியை மாற்ற ரெடியாக உள்ளவர்கள் ..பழக்க வழக்கத்தை மாற்ற தயாரக இல்லை

Unknown said...

இதில் பைக் ஓட்டுபவர்களின் நிலைமை சொல்லி மாளாது....வண்டியை மாற்ற ரெடியாக உள்ளவர்கள் ..பழக்க வழக்கத்தை மாற்ற தயாரக இல்லை

Bharathi Dhas said...

// உடலிலிருந்து பலகோடி செல்கள் உதிர்வது போலவே பல கோடி செல்கள் உற்பத்தியும் ஆகிறது. எனவே எழும்பு, ஜவ்வு தேய்மானம் என்பது இல்லை. அவ்வாறாயின் ஜல்லி உடைக்கும் தொழிலில் உள்ளவர்களின் கைகள் பொழுதெல்லாம் இயங்குவதால் தனித்தனியாகக் கழன்று விடும்.

பலரும் உணராத நிதர்சனமான உண்மை...

நன்றி