எந்த ஒரு நல்ல செயல் நடக்க வேண்டுமானாலும் அதற்கு
முதலில் நல்ல எண்ணம் வேண்டும். நமது வாழ்விலே
நல்லது நடக்க வேண்டுமானால் அதற்கு முதலில்
நமது உள்ளம் தூய்மையாகி நல்ல எண்ணமும்
பரந்த மனப்பான்மையும் உடையதாகவும்
எல்லோருக்கும் நன்மை விளைவிக்கக் கூடியதாகவும்
இருக்க வேண்டும்.
எண்ணம் குறித்த அறிஞர்களின் கருத்து.
டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்தி-
நானும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து விட்டேன்.
வாழ்க்கை என்பது நல்லெண்ணம் தவிர
வேறொன்றும் இல்லை.
சுவாமி சின்மயானந்தா-
ஒருவனிடமிருந்து வெளிச்செல்லும் எண்ணம்
நூறு மடங்கு வலுவுடன் மீண்டும் அவனிடமே
வந்து சேருகிறது.
பழமொழிகள்
1. உள்ளத்தனையது உயர்வு
2. வினை விதைத்தவன் வினையறுப்பான்
3. எண்ணம் போல் வாழ்வு
4. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
ஆக இந்தக் கருத்துகள் அனைத்தும் நமக்கு தெரிவிப்பது
ஒன்றுதான். நமது மனம் தூய்மையுடையதாக
உயர்ந்த, பரந்த எண்ணம் உடையதாக
இருந்தால் நமது வாழ்க்கை உயர்வடையும்.
அதற்கான எளிய சிறந்த வழி ஒன்று
உள்ளது. நீங்கள் தினமும் காலையில்
விழிக்கும் போதும், இரவு உறங்கும்
முன்பும் கீழ்கண்ட வாசகங்களை மனதில்
தியானித்துக் கொள்ளுங்கள்.
விரைவில் உங்கள் உள்ளம் தூய்மையடைந்து
உங்கள் வாழ்வில் உயர்வடைவதை
உணர்வீர்கள்.
அன்னைக்கு வணக்கம்
தந்தைக்கு வணக்கம்
குருவுக்கு வணக்கம்
எங்கும் நிறைந்து எல்லாவுமாய் இருக்கும்
இறைப்பேராற்றலுக்கு வணக்கம்
"தூய உலக கூட்டாட்சி
போரில்லா அன்புலகம்
உலக மக்கள் சுபிட்சம்" - என்ற கருத்து
எல்லோர் உயிரிலும் ஊடுருவி
எண்ணமாய், செயலாய் மலரட்டும்.
அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.
வாழ்க வையகம் . வாழ்க வளமுடன்.
குறிப்பு : இதை உங்கள் படுக்கை அறையில்
ஒட்டி வைத்துக்கொண்டால்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வாழ்க வளமுடன்.
.
.