Sunday, January 24, 2010

இளமை எனும் பூங்காற்று


கவர்ச்சி படங்களையும் ஒன்றுக்கும் உதவாத விசயங்களையும் எழுதி இளய தலைமுறையின் மனதில் மெல்ல நஞ்சைக் கலக்கும் பத்திரிக்கைகளுக்கு மத்தியில், இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்து ஆக்கபூர்வமான விசயங்களை மட்டுமே கையிலெடுத்து அமைதியாய் ஒரு புரட்சியைத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறை என்ற பத்திரிக்கையைப் படித்தேன். கல்வி, தொழில், ஆராய்ச்சி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மரம் வளர்க்கும் கிராமம், சுய தொழில் குழுக்கள் என்று அத்தனையும் பயனுள்ள விசயங்கள். நமது அறிவார்ந்த இளைஞர்கள் மீது ஆக்கபூர்வமான நம்பிக்கை கொண்டுள்ள அந்த பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற பத்திரிக்கைகளால் தான் திறமையும், நேர்மையும், நம்பிக்கையும் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டி வலிமையான பாரதத்திற்கு வித்திட முடியும். புதிய தலைமுறை பத்திரிக்கையும் அதைச்சார்ந்த அனைவரும் வாழ்க வளமுடன்.

5 comments:

ஹேமா said...

நன்றி அறியத் தந்தமைக்கு.

தாராபுரத்தான் said...

வீட்டுக்கு ஒரு புதிய தலைமுறை உருவாக(வாங்க)வேண்டும்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு பகிர்வு!

நானும் அறிந்து கொண்டேன்..

Thameez said...

From Kalaignar family? I was told like that.

V.N.Thangamani said...

நன்றிகள்
// அன்பு ஹேமா
// தாராபுரத்தான்
// முனைவர்.இரா.குணசீலன்
// Thameez
வாழ்க வளமுடன்