Friday, November 20, 2009

தவம் என்றல் என்ன - III

இயமம் , நியமம்:
தவத்திற்கு அடிப்படையான ஆசனம் , பிரனாயாமத்தைப் போலவே இயமம், நியமமும் முக்கியமானதாகும் .

இயமம் என்பது தவிர்க்கப் பட வேண்டியது : அவை
1. பிற உயிர்களை துன்புறுத்தாமலிருத்தல்
2. பொய் பேசாமலிருத்தல்
3. பிறர் பொருளை அபகரிக்காமல் இருத்தல்
4. முறையற்ற பால்கவர்ச்சி கொள்ளாமலிருத்தல்
5. பிறர் பொருளை தாணமாகவும் பெறாமலிருத்தல்
ஆகிய ஐந்தும் ஆகும் .

நியமம் என்பது கைக்கொள்ள வேண்டியவை : அவை
1. மன மற்றும் உடலின் தூய்மை
2. நிறை மனம் அதாவது இருக்கின்ற சூழ்நிலையைக் கொண்டே மன நிறைவுடன் வாழ்தல்
3. உயர் வாழ்வு நெறிகளை (நேர்மை , தூய்மை , நல் அன்பு ) தேடிப் படித்தல் , கேட்டல்
4. உயர் வாழ்வு நெறிகளை வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுதல் ,
5. பிரபஞ்சப் பேராற்றலின்கன் நம்மை முழுமையாக ஒப்புவித்தல்
ஆகிய ஐந்தும் ஆகும் .

இவையெல்லாம் படிப்பதற்கு கடினமாகத் தோன்றினாலும் , கிடைத்தற்கரிய
இந்த மானுட பிறப்பை பயனுள்ளதாக்க எண்ணமிருப்பின் முறையான ஒரு குருவை நாடி வாரத்தில் ஒரு மணி நேர பயிற்சியும் மற்ற நாட்களில் வீட்டில் தினமும் ஒரு மணிநேர பயிற்சியும் மேற்கொண்டால் மிகவும் எளிதானதும் சந்தோசமானதும் தான் .
( இன்னும் சந்தோசிக்கலாம் .. .. .. )

3 comments:

ஹேமா said...

பிரயோசனமான பதிவுதான்.
வாசிக்கிறேன் சந்தோஷமாய்.

கலகலப்ரியா said...

வழக்கம்போல மிக நல்ல பகிர்வு..!

V.N.Thangamani said...

/// பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் தோழிகள் ஹேமா, பிரியாவுக்கு நன்றிகள்.///