Wednesday, November 11, 2009

ஓசோன்

ஏத்தளிறைக்க நிழல்
கிணத்தோரம் இரண்டு மரம் .
கலப்பை கட்டை வேணுமுன்னு
காட்டுக்குள்ளே நாலு மரம் .

மாடு கட்ட நிழல் வேண்டி
மறுபடியும் நாலு மரம் .
சாலையிலே அரசாங்கம்
சரமாக நட்ட மரம் .

ஊத்தெறைக்க பம்புசெட்டும்
உழவு செய்ய டேக்டரும்
நாலுவழிச் சாலை வந்து ,
நம்ம மரம் பாழாச்சு !

வாகனங்கள் பெருகியதில்
வரும் புகையும் கேடாச்சு !
ஓசோனில் ஓட்டயின்னா ...
சுற்றுச்சுழல் மாசு என்றால்...

தன் தலயில் மண்வாரி
தானே போட்டுக்கொண்டோம் !
இந்நிலையை மாற்றுதற்கு
எவரேனும் முயல்வாரோ ?

7 comments:

கலகலப்ரியா said...

தெரியலீங்க..! மீண்டும் ஒரு சிந்தனைக்குரிய கவிதை..!

vasu balaji said...

மரம் நட வரும் மந்திரி கூட வர வாகனத்தாலேயே 4 மரம் பட்டுப் போகும். நியாயமான வருத்தம். நல்லாருக்குங்க தங்கமணி

ஹேமா said...

மணி எல்லாருமே புலம்புறோம்.
அப்புறம் நாங்களும் விஞ்ஞான உலகத்தோடுதான் !

V.N.Thangamani said...

///நன்றி பிரியா, யாரோ அல்ல நாம் தான் முயற்சி எடுக்கவேண்டும்.
///நன்றி வானம்பாடிகள் அய்யா, அந்தகூட்டத்தினால் தான் நாடு நரகமாகி வருகிறது அய்யா.
///நன்றி ஹேமா, நல்லென்ன விதைகளை தூவிக்கொண்டே இருப்போம், ஒரு நாள் முளைக்கும் ஹேமா.

malarvizhi said...

nalla kavithai. yennudaiya karuthukkal innum mudiyavillai . melum inaikkiren . padikkavum. visit my blog.

malarvizhi said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி . நேரம் இல்லாமையால் கருத்துக்களை உடனே வலையில் சேமிக்க முடியவில்லை . படித்து விட்டு கருத்தை கூறவும்

angel said...

a very good poem its too good to create awarness through poems abt global warming