Wednesday, November 11, 2009

ஒரு பின்னூட்டத்தின் பதில்

Anonymous Said
ஏனய்யா, திருப்பி திருப்பி கவிதை எழுதியோ
அல்லது ஊருக்கு உபதேசம் செய்தோ வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களுக்கு
போர் அடிக்காதா?

பின்னூட்ட மிட்டவற்கு
பிரியமுடன் நன்றி சொல்வேன் .
எழுதுவதன் காரணம்தான்
என்னவென்று யோசிக்கவும் .

விளைவுகளின் பயன்குறித்து
விமர்சனம் பண்ணிடவும்
நல்லதோர் வாய்ப்பளித்த
நண்பர்க்கு நன்றி சொல்வேன்

பதின்மர் வயதினிலே
படித்திருந்தால் நான்கூட
இப்படித்தான் கேட்டிருப்பேன்
இறுமாப்பாய் ஒரு கேள்வி .

காதலும் காமமும்
கவர்ந்திழுக்கும் வயதினிலே
மற்றெல்லாம் வீனேன்று
மனம் நினைக்கும் அது உண்மை .

அம்மணமே அற்புதமாய்
அறிவிலே நிறைந்திருக்க
அதற்கு நிகர் ஏதுமில்லை
என நினைத்தேன் அது உண்மை .

தொடு உணர்வே உயிரென்று
துடித்த செல்கள் தேகமெங்கும்
நித்தியமாய் இருக்குமென
நினைத்திருந்தேன் ஒரு சமயம் .

நாட்கள் நகர்ந்து சென்று
நித்தியம் நிறமிழந்தபோது
சாசுவதம் எல்லாம்
சாதாரமாய் ஆக ...

அனைத்தையும் தாண்டிய
அசாதாரண மொன்று
எங்கோ இருக்குமென
என்னுள்ளே தோன்றியது .

தேடும் மார்க்கத்தை
துரிதமாக்கி விட்டேன் . - அது
மனதை துய்மையாக்கவேண்டும்
மற்றவரை மதித்துநடக்கவேண்டும்

எல்லோருக்கும் நல்லதே நினைக்கவேண்டும்
எதிரியையும் வாழ்த்தும் நிலை வேண்டும்
இப்படி நிறைய .... வேண்டும்களை - என்னுள்
போட்டுவிட்டுப் போய்விட்டது .

இந்த வானம் ஒரு
கூரையாய் தெரியும்
உலகின் சுபிட்சமே
உயிர் மூச்சாய் இருக்கும்

அலுத்துப் போகாத
அற்புத நிலையான
உண்ணதத்தை தேடும்
உயர்வான மார்க்கமிது .

இது ஒரு சுகம்
இணையற்ற சுகம்
அப்புறமேன் அலுத்துப் போகிறது ?

உங்களில் மனிதமிருந்தால்
நீங்களும் ஒரு நாள்
இங்கே நகர்வீர்கள் . . .

13 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பதில்..

ஈரோடு கதிர் said...

அருமையான பதில்

ப்ரியமுடன் வசந்த் said...

பதிலையும் கவிதையா சொல்லிட்டீங்க..

அனானியெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ்

அதெல்லாம் அவிழ்த்துவிட்ட கழுதைங்க..

மாடல மறையோன் said...

குழப்பம்தான் மிஞ்சுகிறது.

அவர் கேட்ட கேள்வி - இப்படி கவிதைகள் எழுதி பிறருக்கு உபதேசம் செய்வது சளிப்பை ஏற்படுத்தவில்லையா உங்களுக்கு? என்பதுதான்.

நீங்கள் கொடுத்த பதில் -

”நான் அனைத்தையும் தாண்டி ஒரு ‘அசாதரணமான ஒன்றைத் தேடிச்சென்றேன். அத்தேடல் என்னிடம் -

'1. எல்லாருக்கும் நல்லதே நடக்கவேண்டும்
2. மனதை தூய்மையாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
3. பிறரை மதித்து நடக்கவேண்டும்
4. எதிரியையும் வாழ்த்தும் நிலைக்குச் செல்ல வேண்டும்’

என்ற கருத்துகளை என்னிடம் ஊற வைத்துவிட்டது.

இதுவே உயர்ந்த மார்க்கம. இது எனக்கு அலுப்புத்தட்டவில்லை”

கேள்விகள் -

1. அனைத்துக்கும் அப்பால் ஒரு அசாதரணமான் ஒன்று உள்ளது; அதைத்தேடுகிறீர்கள். அது என்ன? கடவுளா?

2. கடவுளோ, அது வேறு எதுவோ? இருக்கட்டும். அதைத் தேடாதவனுக்கு நீங்கள் அந்தத் தேடலிலிருந்து பெற்ற
1,2,3 அண்ட் 4 குணங்கள் வாராதா?

3. இம்மார்க்கமில்லாதவனெல்லாம், பிறரை இகழ்வானா? எதிரியை ஏசுவானா? இறுமாப்பு கொள்வானா? அடக்கமும் உயர்ப்ணபுகளுக்கும் நீஙகள்தான் வாரிசுதாரா?

கேட்ட கேள்விக்கு நேரடியாக சொன்னாலென்ன?

”எனக்கு எது பிடிக்கிறதோ, அதைச்செய்யும் போது சளிப்போ, அலுப்போ வருவதில்லை”

என்று சொன்னால் அது ஒரு honest answer.

உங்கள் கவிதையே ஒரு இறுமாப்பில் தோய்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது!

vasu balaji said...

நல்ல பதில் தோழரே. ஆயினும் உங்களுக்கு முகம் காட்ட மறுப்பவர்க்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் என்ன? உங்கள் எழுத்து உங்கள் குழந்தை. விரும்பிப் பார்க்க வருபவர்கள் வருகிறோம். நகம் வெட்டச் சொல்லலாம், துணி மாற்றச் சொல்லலாம், போர்த்திவிடச் சொல்லலாம். ஏன் பெண் குழந்தை, ஏன் ஆண் குழந்தை என்றெல்லாம் கேட்பது பொழுது போகாமல் செய்யும் வேலை.

இது என் கருத்து. வெளியிடுவதோ, தடுத்து வைப்பதோ உங்கள் உரிமை. தவறாக எண்ணமாட்டேன்.

Anonymous said...

//உங்களில் மனிதமிருந்தால்
நீங்களும் ஒரு நாள்
இங்கே நகர்வீர்கள்//

நிச்சயம் நகர்ந்தே ஆகுவார்கள்.

அதற்காத்தானே இத்தனை போராட்டங்களும்.

என்ன... காலங்கள் தான் முன்னே பின்னே இருக்கும்.

கலகலப்ரியா said...

Arumaiyaana bathil..! asaththunga..!

மாடல மறையோன் said...

முதலில் நான் அந்த பெயரைவெளிப்படுத்த விரும்பா பின்னூட்டக்காரர் அல்ல.

வானம்பாடிகள், பிரியமுடன் வசந்த் போன்றவர்கள் நினைப்பதென்னவென்றால், பெ.வெ.வி. பின்னூட்டக்காரர்கள் சொன்னால், அது விலக்கப்படவேண்டும். ஏன்?

எ-டு. நான் ஒருமுறை இணையதளத்தில் பிரபலமான தமிழ்ப்பேராசிரியரோடு பின்னூட்டத்தில் என் பெயரில் உரையாடிக்கொண்டிருந்தேன். அது நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.

பின்னொரு பதிவில், அவர், ‘ஒருவள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

‘ஒருவன்’ என்ற ஆண்பாலுக்கும், ‘ஒருத்தி’ என்பதுதானே பெண்பால். இதுதானே தமிழ் இலக்கணம்? ஆனால், அப்பிழையைபோட்டவரோ, ஒரு தமிழ்ப்பேராசிரியர். அவர் மனம்புண்படுத்த நான் விரும்பவைல்லை. ஆனால், அப்பிழையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க மனமில்லை.

எனவே, அதை, பெயரில்லா ஒருவன், என்ற அடையாளத்தில், எழுதினேன்.

எனவே, பெ.வெ.வி. ஆட்கள் எல்லாரும் முட்டாளகளும்; அயோக்கியன்களும் அல்ல. மற்றவர்கள் எல்லாரும் சத்திய சீலர்கள் அல்ல.

தன் பெயரை வெளியிட்டே பல கொடுமைகள் செய்யலாம். Did Hitler conceal his identity?


Mr Thangamani has poetical talents. Congrats.

RamGP said...

நல்ல பதில் கொடுத்திங்க

சமயங்களில் அனானிகள் இப்படித்தான் செய்துவிடுகிறார்கள் ... நல்ல விஷயமா இருந்த எடுத்துங்க இல்லேன்னா கண்டுக்காதீங்க

ஹேமா said...

முகமூடிகள் முகம் தொலைத்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.உங்கள் எண்ணங்களில் கவனத்தை விடுங்கள்.அவர்கள் கூடப் புரிந்துகொள்வார்கள் ஒருநாள்.

V.N.Thangamani said...

அன்பு அமலன் அவர்களுக்கு.
உங்கள் கேள்விகளுக்கான பதில்
1. பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றல் களம். அதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுங்கள்.
2. அதை தேடாதவனுக்கு நான்கு குணங்கள் வராதென்று சொல்லவில்லை. அதை தேடும் முதல் படியிலே இந்த நான்கும் இருக்கிறது என்று சொல்கிறேன்.
3. இம்மார்க்கமில்லாதவரெல்லாம் நல்லவராகவும் இருக்கலாம், கெட்டவராகவும் இருக்கலாம். ஆனால் இம்மார்க்கத்தை தேடுபவர் நல்லவராகத்தான் இருந்தாக வேண்டும். அந்த ஆற்றலால் படைக்கப்பட்ட சக உயிர்களை நேசிக்காமல் அந்த ஆற்றலை நோக்கி பயணிக்க முடியாது.

அந்த பின்னோட்டத்தின் உட்கருத்து இது உங்களுக்கு எப்படி பிடிக்கிறது என்பது தான். அதற்கு இதை தேடும் பாதையில், இவை சாத்தியம் என்று கூறியிருக்கிறேன்.
கூடவே பருவ வயதில் இருப்பவர்களுக்கு இதையும் தாண்டி பயணிப்போம் என்கிற கோடு காட்டியிருக்கிறேன்.

V.N.Thangamani said...

வலை thalathil thavalum irandu maatha kulanthaikku
kaikoduththu nadai palakkum அன்பு ullangal
முனைவர்.இரா.குணசீலன்
கதிர் - ஈரோடு
பிரியமுடன்...வசந்த்
வானம்பாடிகள்
கலகலப்ரியா
ராம்
ஹேமா
akiyorkku
நன்றி
(editoril kolaru
tamil angila kalappirkku
mannikkavum)

V.N.Thangamani said...

வலை thalathil thavalum irandu maatha kulanthaikku
kaikoduththu nadai palakkum அன்பு ullangal
முனைவர்.இரா.குணசீலன்
கதிர் - ஈரோடு
பிரியமுடன்...வசந்த்
வானம்பாடிகள்
கலகலப்ரியா
ராம்
ஹேமா
akiyorkku
நன்றி
(editoril kolaru
tamil angila kalappirkku
mannikkavum)